சனி, 2 ஜனவரி, 2016

நமது கல்வி முறை



நம் நாட்டில் கல்வி முறை பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுகொண்டு  இருக்கும் பொழுது பசங்க 2 திரைப்படம் பெற்றோர்களின் மனநிலைமையை நம் கண்முன்னே கொண்டு வருகின்றது..

நமது கல்விமுறை உண்மையாகவே பயனுள்ளதாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே என் பதில். ஆமாம் எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அவனது பெயரை எழுத தெரியவில்லை, ஒற்றை இலக்க எண்களின் கூட்டல் தெரியவில்லை. அப்படி என்றால் அவனுக்கு 8 ஆண்டுகளாக என்ன சொல்லி கொடுக்கபட்டது அவனது ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன..



கல்வி என்பது வெறும் மனப்பாடம் ஒப்புவித்தல் என்ற அளவிலேயே பார்க்க படுகின்றது..பாட புத்தகங்களில் பின்னால் கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்வி பதில்களை, இந்த கேள்விக்கு இந்த பதில் என்று மனப்பாடம் செய்து கொண்டு தான் தேர்விற்கு செல்கின்றார்கள். நமது கல்வி முறையும் அதனையே மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது..

எத்தனை 8 ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்கள் குடும்ப உறுபினர்களின் பெயர்களை எழுத தெரிந்தவர்களாகவும் குறைந்தது கூட்டல் கணக்கு தெரிந்தவர்களாகவும் தமிழ் நாளிதழ்கள் வாசிக்கும் திறமை உள்ளவர்களாகவும் இருகின்றார்கள் என்று பார்த்தால் 10% என்ற அளவுக்கே இருக்கும் என்பதே நிதர்சனம்..
ஏதோ ஒரு சூழ்நிலையால் கல்வி தடை பட்டாலும் அவனுக்கு இந்த கல்வி பயனுள்ளதாக இருக்குமா என்றால் இருக்காது..
நம் நாட்டில் தொடக்க கல்வி மட்டும் அல்ல அனைத்து கல்வி முறைகளுமே அவ்வாறு தான் இருகின்றன..
10 ம் வகுப்பு படித்தவனுக்கு நாளிதழ் படிக்க உதவாத கல்வி முறை நமக்கு தேவையா?...

நம்மில் பல பேர் பொறியியல் பயின்று இருக்கின்றோம்...பயின்று தான் இருக்கின்றோம் அவ்வளவுதான்..எத்தனை பேரால் நம் வீட்டில் பழுதடைந்த மின்விசிறி போன்ற பொருள்களை சரி செய்யும் திறமை பெற்று இருக்கின்றோம்..குறைந்தது junction box ஐ கலட்டி பார்க்கும் அளவுக்கு கற்று இருக்கின்றோம்.. இது நம் தவறா இல்லை கல்வி முறையின் தவறா... ஒன்று இரண்டு சதவிகித மாணவர்கள் இந்த குறைகளை பெற்று இருந்தால் அது மாணவர்களின் குறையாக இருக்கலாம் ஆனால் முக்கால் வாசிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்படியே இருப்பதற்கு கல்வி முறை தான் காரணமாக இருக்க முடியும்..

கல்வி முறை, ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவர்க்கும் இருப்பதை போலவே பெற்றோர்களுக்கும் மிக பெரிய பொறுப்பு இருக்கிறது..உடல் உறுதியுடன் மட்டும் பிள்ளை வளர்ந்தால் மட்டும் போதும் என்று எண்ணாமல் அவர்கள் இந்த உலகில் உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் பிள்ளைகள் வாழ்வதற்கு கல்வி அறிவும் வேண்டும் என்பதை உணர்ந்து கல்வியின் மகத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்..

கல்வி கற்கும் திறமை என்பது மாணவர்களுக்கு மாணவர்கள் வேறுபடும் என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து கொண்டு அவர்களின் மீது தங்கள் எண்ணங்களை திணித்து விடாமல் அவர்களின் போக்கிலேயே சென்று அவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டும்.

கல்வி என்பது  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று இல்லாமல் கற்கும் கல்வி வாழ்க்கை கல்வியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே விருப்பம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக