ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

அவள் பெயர் தெரியவில்லை ...

அதுவொரு மாலைவேளை .....

சுண்டல் விற்கும் சிறுவனை தவிர்த்து அனைவருமே  ஜோடிகள் தான் ...கடற்கரை மணலில் காதல்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் . அதை தகர்க்க அப்பாக்களைப்போல அலை முயன்றுகொண்டிருக்கிறது .



அதிசயமாய் இன்னொருத்தியும் தனியாக அமர்ந்திருக்கிறாள் . தென்றலில் அசையும் பூக்களைப்போல அவள் உதடுகள் அசைந்து முணுமுணுத்தன . இடது கையில்  மாட்டிக்கொண்ட செல்பேசியை தன் காலில் மெல்ல அடித்துக்கொண்டிருந்தாள் .வலது கரம் மணலில் கிறுக்கிக்கொண்டு இருக்கின்றது .

அலையின் ஓசை  இவளது காதுகளின் தோடுகளோடு உயிரிழந்து போயின போல . எதுவும் அவள் காதுகளில் பாயவில்லை . திடீரென்று எழுந்தவள்  கண்களை துடைத்துக்கொண்டு வேகமாய் சாலைப்புறத்தை நோக்கி நடந்தால் ...

காதலன் வராமல் போயிருக்கலாம் இல்லையென்றால் காதல் தோல்வியாக இருக்கும் இதுதானே  இவர்களுக்கு வேலை என எண்ணி நானும் புறப்பட முயன்றேன் ...

காதல் தோல்வியா அல்லது காத்திருப்பா , ஒரே குழப்பம் .
சரி வரைந்ததை பார்த்தால் ஒரு முடிவு கிடைக்கலாம் என்று அவள் அமர்திருந்த இடம் நோக்கி நடந்தேன்  ...

பார்த்தேன் ...
தலை குனிந்தேன் ...

அவள் வரைந்திருந்தது 'ஸ்டெதஸ்க்கோப் '....

இதயம் வலித்தது
தவறாக எண்ணிவிட்டோமே என்று ..

மருத்துவம் படிக்க துடித்து கொண்டிருக்கும் மாணவி அவள் என்று உணர்ந்தேன் ...கடல் காதலர்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் என உணர்ந்தேன் ...


நீட் தேர்வு குழப்பங்கள் நீங்கட்டும் .

ஸ்ரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக