தமிழகத்தில் பெரும்பலான இடங்களில் இலவச கழிப்பறைகளின் நிலைமை மிக கேவலமாக உள்ளது ....மாநகராட்சிகள் கழிப்பறைகளின் நிலையை கண்டுகொள்வதே இல்லை .
பெரும்பலான இலவச கழிப்பறைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டண கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன .
மக்கள் கூடும் இடங்களில் அடிப்படை வசதிகளை இலவசமாகவே அளிக்க வேண்டியது அரசின் கடமை .ஆனால் இன்று பெரும்பலான இடங்களில் பொதுக்கழிப்பறைகளுக்குள் நுழையவே முடியாத நிலை நிலவுகின்றது . கட்டண கழிப்பறைகளிலோ வாட்டர் பாக்கெட்டின் விலையை விட அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது ...
கண்டுகொள்ளாத அரசாங்கம் :
அரசாங்கமோ மக்கள் எக்கேடுகெட்டாள் என்னவென்று போய்க்கொண்டிருக்கிறது ...மாநகராட்சிகள் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு கழிப்பறைகளை குத்தகைக்கு விட்டு காசுபார்க்கின்றது ...
திரையரங்கில் சுத்தம் சுகாதாரம் கழிப்பறை கட்டுவோம்னு விளம்பரம் கொடுத்தால் மட்டும் போதுமா ? மக்களுக்கு முன்னோடியாக அரசு செல்லவேண்டாமா ...
எதை எதையோ இலவசமா கொடுக்கும் அரசாங்கம் அத்தியாவசிய தேவையுமான கழிப்பறைகளில் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கதக்கது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக