கச்சத்தீவு - இந்த சொல் அடிக்கடி செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வந்து போகும். அப்படி வந்து போகும் நேரங்களில் ஒரு காரசாரமான விவாதமும் அந்த இடத்தில் அரங்கேறும். நாமும் ஒன்றும் புரியாமல் அந்த சண்டை காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த பதிவு கச்சதீவு குறித்த கேள்விகளுக்கு நிச்சயமாக பதில் அளிக்கும்..
கச்சதீவு இந்தியாவினுடையதா?
கச்சதீவை ஏன் இலங்கைக்கு கொடுக்க வேண்டும்?
திமுக அதிமுகவின் பங்கு என்ன?
இனிமேல் கச்சதீவை திரும்ப பெற முடியுமா?
கச்சதீவு இந்தியாவினுடையதா?
ஆம். கச்சதீவு இந்தியாவினுடையது தான். 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன. [Source : விக்கிப்பீடியா]

அனைவரும் நினைப்பதைப்போல இலங்கை கேட்டவுடன் கச்சதீவு ஒன்றும் இலவசமாக கொடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு பின் மிகப்பெரிய ராஜதந்திர செயல்கள் உள்ளன. 1971 ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின்போது இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பாகிஸ்தான் விமானங்கள் இலங்கையில் தரையிறங்கவும் எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும் அனுமதித்தது. அந்த போரில் திறம்பட செயல்பட்டு வெற்றியும் பெற்றது இந்தியா. இருப்பினும் இலங்கையின் இந்த செயல்பாடு இந்தியாவிற்கு வெளிநாட்டு உறவில் மிகப்பெரிய அடியாக இருந்தது. ஏனெனில் நாட்டின் அனைத்து புறங்களிலும் சீனா, பாகிஸ்தான், இலங்கை என அனைத்து நாடுகளுமே எதிரிகளாக இருப்பது நல்லதல்ல என்பதை இந்தியா உணர்ந்திருந்தது. எனவே தான் இலங்கைக்கு கச்சதீவை இலவசமாக அளித்து இலங்கை உடனான உறவை புதுப்பித்துக்கொள்ள இந்தியா தயாரானது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் - இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திமுக அதிமுகவின் பங்கு என்ன?
தமிழ்நாடு அரசின் முழுச் சம்மதமில்லாமல் கச்சதீவு ஒப்பந்தம் கைச் சாத்திடபபட்டிருந்தது. இருப்பினும் அன்று முதல் அமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியின் விடாமுயற்சியால் தமிழக மீனவர்களுக்கு சாதகமான சில திருத்தங்கள் இவ்வொப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன.
*** இந்திய மீனவர்கள் கச்சதீவுக் கடலில் மீன் பிடிப்பதற்கும், அதன் நிலப் பகுதியில் தங்கி வலைகளை உலர விடுவதற்கும் அனுமதி அளிப்பதென்றும்,
இந்திய மீனவர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமான இந்த இரு திருத்தங்களும் சேர்க்கப்பட்டதால் கச்சதீவு மீதான தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது. இந்தியப் பாராளுமன்றத்திலும் - மாநிலங்கள் அவையிலும், கச்சதீவு ஒப்பந்தத்துக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் கண்டனக் குரல் எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்கள். அதிக அதிகார மையத்திலிருக்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் ஒரு வரம்புக்கு மீறி எதிர்க்க முடியாத சூழ்நிலையில், தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் கச்சதீவு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதனையாவது மத்திய அரசு அனுமதித்ததே என்று ஆறுதல் கொள்ளலாம்.
இந்தியாவின் வெளி உறவுக் கொள்கை அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையில் உருவான இவ்வொப்பந்தத்தை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது. இது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் இருப்பதால் அதைத் தடுக்கவும் முடியாது.
1960ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெறாமல் இந்திய பகுதிகளை தாரைவார்ப்பது செல்லாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை இந்த கச்சதீவு ஒப்பந்தம் மீறுவதாகவும் எனவே கச்சதீவினை மீட்க வேண்டும் அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் கச்சதீவை திரும்ப பெற முடியுமா?
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் மத்திய அரசு கச்சதீவினை மீட்க முயலலாம். ஆனால் இன்றைய ஆபத்தான சூழ்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான நட்புறவில் கடுமையான விரிசலை உண்டாக்கும். ஏற்கனவே சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையுடன் நெருங்கிவரும் இந்த நேரத்தில் கட்சதீவு மீட்பு என்பது பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த பிரச்சனை வெளியுறவுக்கொள்கையில் பிரச்சனைகளை உண்டாக்கும் என்று தெரிவித்தால் அதை மீறி உச்சநீதிமன்றம் உத்தரவிட மறுக்கும் உண்மை.
முடிவாக இப்போது உள்ள சூழ்நிலையில் கச்சதீவை மீட்பது என்பது முடியாத காரியம். வேண்டுமென்றால் இலங்கையிடன் பேசி இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை இனிமேலாவது தடுக்கலாம்..
நன்றி

ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக