செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கமல்ஹாசன் அரசியல் பேச தகுதியில்லை என்பது சரியா ? பேச தகுதியில்லைனு சிலர் சொல்ல காரணம் என்ன ?

கடவுள் இருக்கிறாரா என்கிற கேள்வி தொடங்கி தற்போது உங்கள் தொகுதிக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுங்கள் என்பது வரையான அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் நேரடியாக இல்லாமல் அதேசமயம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருந்துவந்திருக்கிறது ....

ஆனால் தற்போது அவர் சசிகலாவிற்கு எதிராகவும் பன்னிர்செல்வத்திற்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவிக்கும் போது தற்போதைய அரசில் பங்கேற்றுள்ள அமைச்சர் செங்கோட்டையன் நடிகர்களுக்கு அரசியல் குறித்து கருத்து சொல்ல தகுதியில்லை என்று கூறியிருந்தார் .

கருத்து தெரிவிக்க தகுதி அவசியமா ?

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு . அதுவும் குறிப்பாக தனக்கான  அரசை அமைப்பதிலும் தனக்கான அரசின் செயல்பாடு குறித்து விமர்சிப்பதிலும் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது ..அது கமல்ஹாசனுக்கும் உண்டு .

சரி எங்கேதான் பிரச்சனை :

தனிமனிதனின் கருத்துக்களுக்கு அளிக்கப்படும் முக்கியதுவத்தை விட பொதுவாழ்வில் உள்ளவர்களின் கருத்துக்கள் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

அதிலும் குறிப்பாக நடிகர்கள் என்கிற முகத்திரையை கொண்டுள்ளவர்கள் தனது சொந்த கருத்தினை தெரிவிக்கும்போது பெரும்பாலான ரசிகர்களால் ஏற்றுகொள்ளப்படுகின்றது ..அதிக முக்கியத்துவம் பெருகின்றது ..

அரசியல்கட்சி தலைவர்கள் கருத்து சொல்லும்போது பின்புலம் பார்க்கும் மக்கள் நடிகர்கள் சொல்லும்போது அவர்களின் பின்புலத்தை பார்ப்பதில்லை

இதனாலயே தங்களுக்கு எதிரான கருத்துக்களை நடிகர்கள் முன்வைக்கும்போது கட்சி வேறுபாடு இல்லாமல் திமுகவும் அதிமுகவும் பிற கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்ய தவறியதில்லை ...

அதிமுக எதிர்க்க காரணம் என்ன ?

ஏற்கனவே ஜெயலலிதாவுக்கும் மோதல் இருந்தது அனைவரும் அறிந்ததே ..

தற்போதய சூழ்நிலையில் சசிகலாவிற்கு எதிரான வலைகளை பாஜகவே பின்னுவதாக பேசப்பட்டுவந்தது ..அதற்கான அறிகுறிகளும் வெளிபடையாகவே தெரிந்தது ...

கமல்ஹாசனும் சசிகலாவிற்க்கு எதிராக பேசிக்கொண்டிருந்த வேளையில் பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியதும் கமல்ஹாசன் பாஜக சொல்லித்தான்
இதை செய்கிறாரோ என்கிற ரீதியில் கமல்ஹாசனை எதிர்க்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக