புதன், 22 பிப்ரவரி, 2017

சபாஷ் நாசா .....புது கிரகத்துக்கு நம்மால போக முடியுமா ?


நாசா சில தினங்களுக்கு முன்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றிணை வெளியிட இருக்கிறோம் என்றவுடன் அது என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அறிவியல் அறிஞர்களிடமும் மக்களிடமும் தொற்றிக்கொண்டது .

நாசா வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பு பூமியை போல 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாகவும் அதில் மூன்றில் மனிதர்கள் வாழ தகுந்த சூழ்நிலை நிலவுகிறது என்பதே ..

அதே நேரத்தில் இன்னும் இந்த கோள்களில் உயிரினம் மரம் போன்றவைகள் உள்ளனவா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை ...அதற்கு இன்னும் மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கிகள் வேண்டுமாம் ..

சரி இப்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்பங்களின்  படி அங்கு செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் என்ற கேள்விக்கு , தற்போது உள்ள தொழில்நுட்பங்களை வைத்துகொண்டு அங்கு செல்ல முடியாது என்று நாசா பதில் கூறியுள்ளது ...

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்கள் அனைத்தும் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது ...அதாவது ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் 186000 miles /second இல் வேகத்தில் பயணம் செய்தாலே 40 ஆண்டுகள் ஆகும் ..இவ்வளவு வேகம் கொண்ட ஊர்தியை உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமென்பதை சொல்ல முடியாது ...

எனவே நம்மால போக முடியாது ...ஆனால் நமது சந்ததியினர் போக வாய்ப்புள்ளது

இவ்வளவு தொலைவில் உள்ள கிரகத்தை ஆராய்வது என்பதே மனித இனத்தின் அறிவுசார்ந்த முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக