வியாழன், 23 பிப்ரவரி, 2017

இன்று ஜெயலலிதா பிறந்தநாள் - ஆளுமையின் வரலாறு மாறிய கதை

இன்று பிப்ரவரி 24 மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் .ஆனால் முன்னால் முதல்வர் என்கிற தகுதியோடு மட்டும் வரலாறு அவரை விட்டுவிட போவதில்லை .ஆம் ஜெயலலிதா அவர்களை பற்றி பேசப்படும்போது நிச்சயமாக சொத்துகுவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டதும்  இடம் பெரும் .

1991 முதல் 1996 முதன்முறையாக முதல்வராக இருந்த கால கட்டமே இந்த சொத்துகுவிப்பு வழக்கிற்கு காரணமாக இருந்தது ..எளிமையாக சொல்லபோனால் அந்த தேர்தல் விண்ணப்ப படிவத்தில் சொத்தாக காட்டியது 2 கோடி , முதல்வராக 91 - 96 க்கு பின் நடந்த தேர்தலில் சொத்தாக காட்டியது 64 கோடி ...இந்த பல மடங்கு சொத்து அதிகரிப்பு தான் இந்த வழக்கிற்கு அச்சாரமாக அமைந்தது ..91 - 96 முதல்வராக இருந்தபோது மாதம்
வெறும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றார் .

ஜெயலலிதா ஆட்சி செய்த காலங்கள் தமிழகத்திற்கு நன்மை பயப்பதாகவே இருந்தது ...பெண்களுக்கான நலதிட்டங்கள் , சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு , மாநில உரிமை , விவசாயிகளுக்கு உதவுதல் என அனைத்து துறைகளிலுமே தமிழகம் இவரது ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக இருந்தது .

கட்சியை நிர்வகிப்பதிலும் சரி ஆட்சியை நிர்வகிப்பதிலும் சரி தனித்தன்மை வாய்ந்தவராகவும் ஆளுமை கொண்டவராகவும் திகழ்ந்தார் . இந்திய அளவில் மிக பெரிய ஆளுமையாக தன்னை உருவாக்கிக்கொண்டார் .. தன் முடிவுகளில் அவர் என்றுமே பின்வாங்கியதில்லை ...மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுக்கு உதவாது அல்லது உரிமையில் தலையிடுவதாக தெரிந்தால் அதை எதிர்க்க தவறியதில்லை ...

இத்தனை சிறப்புகளையும் ஆளுமைகளையும் தனித்தன்மைகளையும் கொண்டிருந்ததாலும் தன் முற்கால தவறுக்கான தண்டணையை காலம் அளித்துவிட்டது . இனி ஜெயலலிதா அவர்களை பற்றி எழுதும்போது வரலாறு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டணை பெற்ற குற்றவாளி என்பதையும் எழுத தவறாது ...

இதுவும் பொதுவாழ்வில் எப்படி தூய்மையாக இருக்க வேண்டும் , அப்படி இல்லாவிட்டால் எவ்வளவு நல்லது செய்தாலும் வரலாறு குற்றத்தை மட்டுமே பிரதானமாக வைத்துப்பேசும் என்பது இந்தக்கால அரசியல்வாதிகளுக்கு ஜெயலலிதா அவர்கள் விட்டுசென்ற பாடமாகவே கருத வேண்டும் ...

இந்த பிறந்தநாளில் அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம் ....

பாமரன் கருத்து

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக