சனி, 18 பிப்ரவரி, 2017

அதோகதியான தமிழக அரசியல் ...இதுவும் கடந்துபோகும் என்று விட்டுவிடலாமா ?...செல்லங்களே


நம்பிக்கை வாக்கெடுப்பில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி எப்படியும் ஜெயித்துவிடுவார் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஏதாவது நடந்து அவர் தோற்றுவிட மாட்டாரா என்ற ஏக்கம் அனைவரது மனதிலும் இருந்ததை யாராலுமே மறுக்க முடியாது ...

சமூக வலைதளங்களில் பெரும்பலான மக்கள் தங்கள் எதிர்ப்பினை கொட்டி தீர்த்து விட்டாலும் முடிவெடுக்கும் அதிகாரம் எண்ணவோ சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் தானே இருகின்றது ...மிரட்டியோ பணத்தை காட்டியோ பதவியாசை காட்டியோ சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டார் .

சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்துவிட்டது , இரண்டுமுறை முன்மொழிந்ததால் செல்லாது , மக்கள் ஆளுநருக்கு புகார் அனுப்பினால் ஆட்சி கலைந்துவிடும் என்றெல்லாம் பேசிக்கொண்டாலும் இவையெல்லாம் நமக்கு ஆறுதலாக மட்டுமே இருக்கும் ..மற்றபடி ஒன்றும் நடக்காது என்பதே உண்மை ..

அதற்காக அப்படியே விட்டுவிடலாமா என்றால் விட முடியாது தான் ...

நாம் என்ன செய்யலாம் ?

இப்போது தெரிவிக்கும் இதே எதிர்ப்பை உங்கள் சட்டமன்ற உறுப்பினர் உங்கள் தொகுதிக்கு  வரும்போதும் காட்டுங்கள் ..

அரசு அறிவிக்கும் இலவச திட்டங்களை புறக்கணியுங்கள்

நான்கரை ஆண்டுகள் சம்பாதிக்கலாம் என்று எண்ணிகொண்டிருக்கும் இவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் போராடுங்கள் ...வழக்கு தொடருங்கள் ..

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குங்கள்

நாங்கள் உங்களை இன்னொருமுறை நம்பமாட்டோம் என புறக்கணியுங்கள்

இதுவும் கடந்துபோகும் என விட்டுவிட கூடாது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக