வியாழன், 16 பிப்ரவரி, 2017

எங்கே தோற்கிறார் அன்புமணி ராமதாஸ் ?

பாமக கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை தொண்டர்கள் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கின்றார் அவரது தந்தையும் பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் ..

தற்போது இருக்ககூடிய கட்சிகளின் அடிப்டையில் பார்த்தால் ராமதாஸ் அல்லது அன்புமணி ராமதாஸ் வெளியிடும் புள்ளிவிபர அறிக்கைகளும் அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களும் , பிரச்சனைகளுக்கு அவர்கள் சொல்லும் தீர்வுகளும் சிறப்பாக துல்லியமானதாக இருக்கும் ..

மேலும் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது அதற்கு முன்பாக நிழல் பட்ஜெட் வெளியிடும் ஒரே கட்சி பாமக தான் ..இவர்கள் குறிப்பிடும் பல திட்டங்கள் மாநில அரசு பட்ஜெட்டிலும் இடம்பெற்று இருக்கும் ..

இத்தனை அக்கரை சமூக பொறுப்பு திறமை என அனைத்துமிருந்தும் இன்னும் தமிழகத்தில் குறிப்பிட தகுந்த வெற்றியை அவர்களால் பெறமுடியவில்லை ...காரணம் பாமக ஒரு சாதிக்கட்சி என்கிற பார்வை மக்களிடத்தில் பரவி கிடக்கின்றது ..

கட்சியை தொடங்கும்போது தேவைப்பட்ட அந்த சாதிய ஆதரவு இன்று அந்த கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது ...

இப்போதுதான் சில கூட்டங்களில் பாமக ஒரு சாதிய கட்சி அல்ல என்று அவர்களே கூற ஆரம்பித்திருக்கிறார்கள் ...இது மக்களிடம் சென்று சேருமா ?

சில நேரங்களில் சில தொகுதிகளில் வெற்றியை பெற்றுத்தந்த சாதிய ஓட்டுகளும் ஆதரவுகளும் தமிழக அளவில் பாமக வெற்றிபெறுவதற்கு தடையாக இருகின்றது ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக