தமிழகத்தில் இருக்க கூடிய இரண்டு கட்சிகளுமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை ...
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில் மிக தெளிவாக ஒரு கருத்து சொல்லப்பட்டிருந்தது ...
இந்த சமூகத்தை அச்சுறுத்தும் ஊழலை நாம் ஏற்றுக்கொள்ளவே , சகித்துக்கொள்ளவே பழகிவிட்டோம் என்பதே
நன்றாக சிந்தித்து பாருங்கள் இப்போது அனைவரும் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டணை அளித்த போது ஆனந்தம் அடைகின்றோம் . இதுதான் உண்மையான தீர்ப்பு என்பது குமாரசாமி அவர்கள் தவறான தீர்ப்பினை அளித்த போதே நம் மனதில் இருந்துகொண்டுதான் இருந்தது .
அப்படி இருக்கையில் எப்படி அதிமுக வை ஆட்சி அமைக்கும் அளவுக்கு தேர்ந்தெடுத்தோம் ....ஏன் நமக்கு இந்த ஊழல் ஓட்டளிக்கும்போது பெரிதாக படவில்லை ...காரணம் எளிது , மக்கள் அனைவரும் அரசியல்வாதின்னா ஊழல் செய்யாமலா இருப்பான் இதெல்லாம் சாதாரணம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் ...
இந்த மனநிலையே மக்களிடத்தில் அரசியல்வாதிகளுக்கு இருந்த பயத்தினை மறைத்துவிட்டது ..
விளைவு இப்போது ஊழல்வாதிகள் சமூகத்தில் பெரும்பான்மையாகவும் நல்லவர்கள் சிறும்பான்மையினராகவும் இருக்கின்றனர் ...இது சமூகத்திற்கு நல்லதல்ல ....
விழித்துக்கொள்ளவேண்டும் மக்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக