ஒருபுறம் முதல்வராக இருந்து பிரதமராக ஆவதற்கு செய்த செய்யாத பலவற்றை விளம்பரமாக்கி மோடி
மாயையை உருவாக்கி வெற்றியும் பெற்றுவிட்டார் ..
வெற்றியோடு விட்டுவிடவில்லை , அடுத்தது தனக்கு போட்டியாக யார் யாரெல்லாம் வருவார்கள் என பிரதமர் ஆனவுடனே சிந்திக்க ஆரம்பித்து விட்டார் .
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி அவர்கள் லிஸ்டில் கடைசிதான் . முதல்வரிசை போட்டியாளர்களாக இருந்தவர்கள் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் , ஜெயலலிதா , மம்தா பானர்ஜி போன்றவர்களே ...
இதில் ஜெயலலிதா இறந்துவிட்டது அவர்களுக்கு தோதாக போய்விட்டது .
எதிரியை எதிர்ப்பது மற்றவர்களின் பாணி , அப்படிச்செய்தால்
சில வேலைகளில்
தோற்றுகூட போக வாய்ப்புண்டு ..மக்களை நம்ப முடியாது ஆனால் அதே எதிரியை வளைத்துப்போட்டு தன் கூண்டில் அடைத்துவைத்துக்கொண்டால் பயப்பட தேவையிருக்காதுதானே ...
அதைத்தான் மோடியும் செய்தார் , பீகார் அரசியலில் குழப்பத்தை விளைவித்தார் , அதற்கு லாலுவின் ஊழலும் உதவி செய்தது ...நிதிஷ்குமார் லாலுவுடன் உள்ள கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தார் .
தற்போது அவர் பாஜக தேசிய கூட்டணியில் இணையவும் வாய்ப்பு இருக்கின்றது ஆக இனி நிதிஷ் மோடிக்கு கீழ் தான் இருப்பார் ...
இதைதான் இந்த பாணியைதான் நாமும் கற்றுகொள்ள வேண்டும் ...போட்டி வணிகத்தில் ஜெயிப்பதற்கு ...
அடுத்தது மம்தா மேடம் தான் ...
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக