அன்புள்ள ரஜினிகாந்த அவர்களுக்கு ,
நீங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்கள் வருகையினை தவிர்க்க செய்தவர்களுக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடாத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நேரம் கூடி வரும்போது சந்திப்பதாகவும் கூறியிருக்கிறீர்கள் ...
இதற்கு முன்பு நீங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வைகோ திருமாவளவன் வேல்முருகன் உள்ளிட்டவர்களின் வேண்டுகோளினால் மட்டுமே தவிர்த்ததாக கூறி இருந்திர்கள் .
உங்களிடம் ஒரு ரசிகனாக ஒரு தமிழ்மகனாக சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன் ...
மீனவர் பிரச்சனை குறித்து அந்த நாட்டு அதிபரிடம் பேசலாம் என்று நினைத்திருந்ததாகவும் , போர் நடைபெற்ற மக்களையும் இடங்களையும் பார்க்க ஆவல் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள நீங்கள் , ஏன் அந்த மூவரின் கோரிக்கையை ஏற்று கொண்டீர்கள் .
தமிழ்மக்களின் நலனுக்காக தான் நீங்கள் செல்வதாக உண்மையிலேயே நினைத்திருந்தால் இவர்களின் விமர்சனங்களை துச்சமென எண்ணி சென்று இருக்கலாமே ? ஏன் செய்யவில்லை .
எப்போதும் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதை போலவே இதிலும் இருந்துவிட்டீர்களோ என்று நாங்கள் நினைத்து கொள்ளலாமா ?
இன்னொரு சந்தர்பத்தில் சந்திப்பதாக கூறியுள்ளீர்கள் ...அப்போதும் இதே தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பயணத்தை தவிர்த்து விடுவீர்களா ?
உங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன் ,
இந்த உலகத்தில் அனைவருக்கும் நல்லவராக இருக்க எவராலும் முடியாது , ஆன்மிகத்தில் புலமை பெற்ற உங்களிடம் இதனை சொல்ல தேவை இல்லை என நினைக்கிறன் .
இனியொரு சந்தர்ப்பத்தில் இலங்கை விவகாரம் மட்டுமல்ல நீங்கள் சந்திக்க போகும் ஒவ்வொரு விவகாரத்திலும் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்கிற நினைப்பினை விடுத்து உங்கள் மனதுக்கு சரியென பட்டால் செய்யுங்கள் ...
நன்றி
பாமரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக