நீட் போன்ற தேர்வுகளும் முக்கியமானவை . இந்தியாவுக்கான தேர்விலிருந்து நாம் வெளியேற முடியாது . தலைவர்கள் கூறுவதைப்போல நிரந்தர விலக்கினை தமிழக அரசு பெற முடியாது . உச்சநீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்திவிட்டது . இந்த ஆண்டு விலக்கு பெறுவதே பெரும் சிரமம்
திமுக ஆட்சிக்கு வந்தாலும் அது முடியாது . இது அவருக்கு தெரிந்திருக்கும் . சந்தர்பவாத பேச்சே இது .
அரசியல் தலைவர்கள் மக்களுக்கு நன்மை பயப்பதாக நினைத்துக்கொண்டு நடக்காதவற்றுக்கு ஆதரவாக பேசி வருவது சரியல்ல .
நீட் தேர்வு விவகாரத்தில் , தமிழக மாணவர்களை இந்திய அளவிற்கு உயர்த்த பாடத்திட்டத்தை மாற்றிட விழைவதே முக்கியமான விசயம் .எதிர்கட்சியென்றால் எதிராகவே பேச வேண்டும் என்பதில்லை யதார்த்தமாகவும் பேச வேண்டும்
நீட் தேர்வு குழப்பதினால் மாணவர்கள் பாதிக்கப்படுவது உறுதி ....
மாநில பாடத்திட்டத்திற்கு ஆதரவாக விலக்களித்தால் நீட் தேர்வில் மதிப்பெண் பெற்றவர்களும் விலக்களிக்காமல் போனால் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களும் பாதிப்படைவார்கள் ....
அடுத்த ஆண்டு இந்த குழப்பத்தினை முற்றிலுமாக நிறுத்த வேண்டியது அரசின் கடமை ....
இந்த ஆண்டுக்கு விலக்களிக்க நினைப்பது சரியே , CBSE பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இந்திய அளவில் போட்டி போடலாம் ஆனால் மாநில பாடதிட்டம் அப்படி அமைக்கப்படவில்லை .
இந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டவுடன் தமிழக மாணவர்களும் தயாராகி விடுவார்கள் .அதுவே பெருமை .
எங்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் வேண்டும் அதோடு நடக்கக்கூடியவற்றை பேசுபவர்களும் வேண்டும் ...
பாமரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக