எந்த ரியோவில் ஒலிம்பிக்ஸ் 2016 போட்டிகள் நடைபெற்றனவோ அதே ரியோவில் தான் இந்த போட்டிகளும் நடைபெறுகின்றன. உலகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்கும் இதற்கு பெயர் பாராலிம்பிக்ஸ் 2016. உடல் ஊனமுற்றோருக்கான போட்டி இது.
தற்போது நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இதுவரை இரண்டு தங்கம் உள்பட நான்கு பதக்கங்கள் இந்தியா வாங்கியுள்ளது. ஆனால் இங்கு கவனிக்கத்தக்க விஷயம் ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெள்ளி வாங்கியபோது நமக்கிருந்த வெற்றியின் துடிப்போ சந்தோஷமோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றபோது எழவில்லை.
ஏதோ சம்பிரதாயத்துக்கு நாம் இந்த வெற்றிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்கிறோம். நம்மை போலவே பிரதமரும் ட்விட்டரில் வலது சொல்லுகின்றார். அந்த மாநில அரசு மட்டும் பரிசை அறிவிக்கின்றது.
வெறும் விளம்பரத்திக்காகவா ?
சிந்து வெற்றி பெற்றதிலும் சரி அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுகளிலும் நமக்கும் சந்தோசம் தான். ஆனால் அப்போது போட்டிபோட்டுக்கொண்டு பரிசுகளை வழங்கியவர்களை இப்போது காண முடியவில்லை .அந்த சூழ்நிலையை நாம் எண்ணிப்பார்க்கும் போது வெறும் விளம்பரத்திக்காக கூட சில பேர் பரிசுகளை வழங்கி இருக்கலாம் என்றே தோணுகின்றது .
பதக்கம் அறிவிக்குமா அரசு?
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் நாடு திரும்புவதற்குள் பட்டங்களை அறிவித்த மத்திய அரசு இப்போதும் அறிவித்தால் அனைவருக்கும் சந்தோசமாக இருக்கும் .
அவர்கள் உடல் ஊனத்தை மன வலிமையால் வென்றவர்கள். உண்மையான பாராட்டுக்கு உரியவர்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக