புதன், 21 செப்டம்பர், 2016

பெண்கள் பாதுகாப்பாக வேலை செய்வதற்கு ஏற்ற மாநிலம் எது தெரியுமா ?

Centre for Strategic and International Studies (CSIS) அமைப்பு 40 தகுதிகளின் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பாக வேலைசெய்வதற்கான மாநிலம் எதுவாக இருக்க முடியும் என்று ஆய்வு நடத்தியுள்ளனர் .

இதில் பெண்கள் வேலை செய்யும் கால அளவு , பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் மீதான வழக்குகளுக்கு நீதி கிடைத்த விதம் , பெண் பணியாளர்களின் சதவீதம் , பெண்கள் தொழில் தொடங்க அளிக்கப்படும் முன்னுரிமை ஆகியவை முதன்மையானவையாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன .

இந்த ஆய்வில் சிக்கிம் 40 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும் தலைநகரான டெல்லி வெறும் 8.5 புள்ளிகள் பெற்று பின்தங்கிய நிலையிலும் இருக்கின்றது .

தமிழகம் 21.1 புள்ளிகள் பெற்றுள்ளது .

பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் பெண்களே நாட்டின் கண்கள் என்று பேசிக்கொண்டிருக்கும் மத்திய அரசு அங்கிருக்கும் டெல்லியையே இந்த நிலையில வைத்துள்ளது .. பிறகு எப்படி பெண்களுக்காக போடப்படும் திட்டங்களும் பாதுகாப்பு சட்டங்களும் மற்ற மாநிலங்களை அடையும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக