பிரேசில் ரஸ்யா இந்தியா சீனா தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ் ....தற்போது நடந்துவரும் இந்த மாநாட்டில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எப்படியெல்லாம் உறுதுணையாக உள்ளதென்று எடுத்துக்கூற நல்ல வாய்ப்பாக உள்ளது ...
பிரதமர் மோடி அவர்களும் இதனை நன்றாகவே செய்து முடித்தார் என்றே கூறவேண்டும் ...ராஜாங்க அடிப்படையில் பாகிஸ்தானை தனிமைபடுத்தும் முயற்சியாகவே இது பார்க்கபடுகின்றது ...
ரஷ்யா பாகிஸ்தானுடன் ராணுவ கூட்டுப்பயிற்சில் ஈடுபட்டது மிகபெரிய சங்கடமாக இந்தியாவிற்கு பட்டது ..ஆனால் புடின் மிக தெளிவாக இது பயிற்சி மட்டுமே என்றும் பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை விற்க மாட்டோம் என்றும் வெளிபடையாக அறிவித்தார் ..
ஆனால் அதே நேரத்தில் பல அதிக தொகைக்கொண்ட ஒப்பந்தங்கள் குறிப்பாக அணு உலைகள் அமைப்பது , இயற்கை எரிவாயு குழாய் அமைப்பது போன்றவை கையெழுத்தாகி உள்ளன ..பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஷ்யா எடுப்பதற்கான விலைதான் இந்த ஒப்பந்தங்களா ? மிக பெரிய கேள்வி ..
பாகிஸ்தானை விட நமது சந்தை மிகப்பெரியது எனவே இதனை பயன்படுத்தி சீனாவையும் நமது பக்கம் இழுக்க முயல்வார் நமது பிரதமர் என்று எண்ண தொன்றுகிறது ஆனால் அது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு எதிராக அது அமையும் ....
பாகிஸ்தானுடன் போர் செய்வதை விட ராஜாங்க அடிப்படையில் தனிமை படுத்தும் பிரதமரின் முயற்சி நல்ல பாதை ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக