வெறும் காகிதத்தில் ஒட்டியிருக்கும் எழுத்துக்களை மாணவர்களின் மண்டையில் ஒட்டுவதையே ஆசிரியரின் வேலை என்று பலர் கருதுகின்றனர் ...ஆனால் அதுவா ஆசிரியரின் பணி ..அதுவா ஆசிரியரின் கடமை ...இல்லை ...
புதிய மாணவன் என்பவன் எந்த பயிரையும் பயிர்செய்யக்கூடிய விளைநிலம் போன்றவன் ...அதிலே நல்ல பயிர்களை போல நல்ல எண்ணங்களை விதைத்து விளைநிலமாக்க வேண்டிய கடமை ஆசியரின் கடமை .
புதிய மாணவனின் மனம் பெருக்கெடுத்து ஓடும் ஆறினை போன்றது ..அதை சரியான பாதையில் திருப்பிவிட்டால் அதற்கும் மற்றவர்களுக்கும் பயன் ..அதேபோலவே தான் மாணவனின் மன ஓட்டத்தினை நல்ல பாதையில் ஓடவிட்டு கரையாக ஆசிரியர் இருப்பது பொறுப்பு ..
வெற்றிபெற்றவர்கள் சிலர் மனைவியை காரணமாக சொல்லுவார்கள் அதை போலவே சிலர் கணவரையும் சிலர் தாய் தந்தையையும் சொல்லுவார்கள் ...ஆனால் அத்தனைபேருமே சொல்லும் ஓரே நபர் ' அவரது பள்ளி ஆசிரியரோ கல்லூரி ஆசிரியரோ தான் '
ஒருவன் சமூகத்தில் நல்ல நிலையில் இல்லாவிட்டால் அவனுக்கு நல்ல ஆசிரியர் கிடைக்கவில்லை என்று அர்த்தம் ...
ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து செயல்பட்டால் ஒவ்வொரு மாணவனும் உயர்ந்தவன் ஆவான் ....
ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக