சமீப காலமாகவே வைகோ அவர்களின் செயல்பாடு சமூக வலைதளங்களிலும் அரசியவாதிகளின் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டுவருகின்றது ..
யார் இந்த வைகோ ?
ஆரம்பத்தில் திமுகவில் இருந்து வந்த போர்க்குரல் தான் இந்த வைகோ .. சிறந்த உணர்வு கலந்த பேச்சு இவரின் அரசியல் நிலையை உயர்த்தியது ...உட்கட்சி மோதல் காரணமாக விலகி மதிமுக என்கிற கட்சியை நிறுவி நடத்தி வருகின்றார் ...
இன்று விமர்சிக்கப்பட்ட காரணம் என்ன ?
எந்த பேச்சு வைகோ அவர்களை அரசியலின் உச்சிக்கு கொண்டு சென்றதோ அதே பேச்சுதான் அவரை விமர்சிக்கவும் வைத்துவிட்டது ...
ஒருகாலத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மேல் தூசு விழ கூட அனுமதிக்க மாட்டேன் என்றவர் ...மற்றொரு சந்தர்ப்பத்தில் ' அதே கருணாநிதி அவர்களை இதற்கு அந்த தொழில் செய்து பிழைக்கலாம் என்று கீழ்தரமாக பேசினார் ( பிறகு சுதாரித்துக்கொண்டு நாதஸ்வரம் தொழிலை குறிப்பிட்டதாக கூறினார் )
அடுத்ததாக ஜெயலலிதா அவர்களை அம்மா என்றழைக்க அருகதை இல்லாதவர் என்று வசைபாடிவிட்டு மற்றொரு சந்தர்ப்பத்தில் சொந்த தாயை பார்த்ததை போன்று உணர்கிறேன் என்று பிதற்றினார் ...
இதே தடுமாற்றத்தை விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதிலும் செய்தார் ..முதலில் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று அறைகூவலிட்டவர் தோற்ற பிறகு அந்த முடிவு தவறு என்கிறார் ....
இது மட்டுமல்ல தனது உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால் பல இடங்களில் மாறுபட்ட கருத்தினை தெரிவித்துக்கொண்டு வருகின்றார் ....
இவருக்கு இவர் கட்சி தேர்தலில் வெல்வதைவிட திமுக கட்சி தோற்க வேண்டும் என்பதிலேயே முழு கவனம் செலுத்துவதாக தோன்றுகிறது ....
சிறந்த பேச்சாளர் சிறந்த உணர்வாளர் சிறந்த அரசியல்வாதி என பல பரிமாணங்களை கொண்டிருந்தாலும் தனது மாறுபட்ட நிலைப்பாடுகளினால் விமர்சிக்கப்படுகிறார் என்பதே உண்மை ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக