செவ்வாய், 3 அக்டோபர், 2017

கமல் - மேடைகளை தவறாக பயன்படுத்துகிறாரா ?


ஏற்கனவே பல பிரச்சனைகளை தாண்டி சிவாஜி மணி மண்டபம் திறக்கப்பட்டது .

சிவாஜி மணி மண்டபம் -

முதலில் திரை துறையினருக்கு மேடையில் இடமே ஒதுக்கப்படவில்லை . பிறகு அமைச்சர் ஜெயகுமார் ரஜினி கமல் இருவரையும் அழைத்து மேடையில் அமர வைத்தார் - இது சிறப்பு .

இயல்பாக நாம் எதிர்பார்த்தது கமல் ரஜினி இருவரும் சிவாஜி உடனான தருணங்களை பகிர்ந்துகொள்வார்கள் . அவர் எப்படிப்பட்டவர் என்பதை விவரிப்பார்கள் எனத்தான் எதிர்பார்த்தோம் .

அங்கே பேசியவர்களில் அரசியலை பேசியிருக்க வேண்டிய அமைச்சர் சிவாஜி நடிப்பை பேசுகின்றார் , பாடலை பாடுகிறார் .

ஆனால் அவரை தந்தையென கூறிக்கொண்டு ரஜினி , அரசியலில் சிவாஜி தோற்றதை சொல்வதற்கு காரணம் சொல்வதைப்போல ஆரம்பித்து கமலிடம் வந்து முடித்தார் .

அடுத்து வந்த கமல் , யாரிடமும் கெஞ்சவேண்டியது இல்லை என நேரடியாக மோதினார் . ஆனால் கமலோ மற்ற நடிகர்களோ ஜெயலலிதா 2002 இல் இடத்தினை ஒதுக்கி கொடுத்தும் ஏன் தந்தைக்கு மணி மண்டபம் கட்ட முயலவில்லை என்கிற கேள்வியும் எழத்தானே செய்கின்றது .

பிக் பாஸ் :

பிக் பாஸ் ஒரு தனியார் நிறுவனம் நடத்துகின்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி . அதில் எங்கிருந்து அரசியல் வந்ததென்பது  தெரியவில்லை .

பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களை  அரசியல் கருத்துக்களை கூறி தனக்கான ஆதரவை பெருக்க முனைவது தவறு .

இதையே அவர் செய்தி சேனலிலோ அல்லது பேட்டியிலோ பேசியிருந்தால் தவறில்லை .

சரி அதனை விடுவோம்  , இப்படி வீர வசனம் பேசியவர் என்ன செய்திருக்க வேண்டும் ...கட்சி ஆரம்பித்து கொள்கைகளை கூறியிருக்க வேண்டும் . ஆனால் அவர் செய்திருப்பது இந்தியன் இரண்டாம் பாகம் படத்தில் நடிக்க அறிவிப்பு . (சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்துவிட்டால் நடிப்பதையே விட்டுவிடுவேன் என்றார் . ) ( அரசியலுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போதே வந்துவிட்டேன் என்றார் )

கமலை ரசித்துக்கொண்டு பார்த்தால் இந்த தவறுகள் புலப்படாது .

இந்த கேள்விகளை கமலிடம் கேட்டாலும் மிகத்தெளிவாக பதிலை சொல்லி மழுப்புவார் .

ஆனால் தவறு தவறுதான் .

கமலை எதிர்ப்பதற்காக இதனை கூறவில்லை . பெரும்பான்மையான இளைய தலைமுறைகள் நம்பிக்கையற்று கிடக்கும் இந்த தருணத்தில் கமலிடம் இந்த குறைகளும் இருக்கக்கூடாது என்பதே அவா .

பாமரன் கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக