மங்குணி : அய்யா அய்யா இனி 2G வழக்கும் அவ்வளவுதான் போலயே
மணியன் : ஏன்டா எதுவும் ஆதாரம் கிடைச்சுருக்கா ?
மங்குணி : அதான் மோடி நேத்து போய் கலைஞரை பாத்துருக்காரே அப்பறம் என்ன கூட்டணினு வழக்குல விடுதலைனு சொல்லுவானுக பாருங்கய்யா
மணியன் : மணியா ஒரு சில கேஸ்ல ஒருசில நீதிபதிகள் கொஞ்சம் அதிகாரத்துக்கு வளைஞ்சு போகலாம்டா அதுக்குன்னு எல்லாரையும் அப்டியே நினைக்கிறது ரொம்ப தப்புடா மணியா சொல்லிப்புட்டேன்
மங்குணி : பாப்போம் பாப்போம் நான் சொல்றது நடக்குதா இல்ல நீங்க சொல்றது நடக்குதான்னு
மணியன் : அப்டியே விடுதலையே ஆனாலும் இந்த சந்திப்புதான் காரணம்னு சொல்ல கூடாது . யாரடா இவன் இப்படியெல்லாம் டீலிங் இருந்தா எதுக்குடா சந்திக்கணும் போன்லேயே பேசிக்கலாமே
மங்குணி : அதெல்லாம் முடியாது கூட்டணி, வழக்கு தள்ளுபடி அவளோதான் .
மணியன் : உன்னையெல்லாம் திருத்த முடியாது . போ போயி அந்த செவலை மாட்டுக்கு தவிடு வை
கருத்து : நமது நீதிமன்றங்கள் சில சமயங்களில் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் உட்பட்டுவிடுகின்றன . அதனை அடிப்படையாக கொண்டு மொத்த நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழப்பது என்பது தவறானது . ஏதோ சிலர் அள்ளிவிடும் பொய்களை நம்ப வேண்டாம் .
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக