செவ்வாய், 7 நவம்பர், 2017

மணியணும் மங்குனியும் (செல்லா காசு ஜெயிச்சுச்சா தோத்துச்சா )



மங்குனி : மணியய்யா வீதில இந்த பக்கம் பாஜக காரன் பண மதிப்பிழப்பு வெற்றி கொண்டாட்டம்னு கூவுறான் , எதுத்தாப்புல மத்த கட்சிக்காரனுங்க கறுப்பு நாளுன்னு சொல்லுறானுக

மணியன் : ஹா ஹா அதுதான் இப்புடி பொலம்பிகிட்டு இருக்கியா ?

மங்குணி : இப்போ செல்லாக்காசு ஜெயிச்சிச்சா  இல்ல தோத்துச்சா

மணியன் : அடேய் மங்குணி இந்த செல்லாக்காசு நல்ல நோக்கத்துக்குத்தான் கொண்டு வந்தானுக

மங்குணி : அப்பறம் ஏன் கறுப்பு நாளாம் ?

மணியன் : யாருகிட்ட கறுப்பு பணம் இருக்கோ அத கண்டுபிடிக்க வேண்டிய பேங்க் ல வேலை பாக்குற சில மொள்ளமாரிகளே பணக்காரங்களோட சேர்ந்துக்கிட்டு பணத்தை மாத்தி கொடுத்துட்டானுக

மங்குணி : அட கொடுமையே ! அவனுக தான் கறுப்பு நாளா  ஆக்கினதா ?

மணியன் : என்ன பண்றது அரசாங்கம் நல்லா திட்டம் போட்டாலும் அத நிறைவேத்த வேண்டியது அரசாங்க ஊழியர்கள் தானடா ..

மங்குணி : அதுவும் சரிதான்யா

மணியன் : சரி போ ...போய் வேலைய பாரு

மங்குணி : இப்போ நாம கொண்டாடணுமா இல்ல கறுப்பு நாளா பண்ணனுமா  ?

மணியன் : எதிர்பார்த்தது நடக்கல ...அதுக்காக கறுப்பு தினமா அனுசரிகிறதும் அதை எதிர்த்து கொண்டாட்டம்னு சொல்லிட்டு இருக்குறத விட்டுட்டு விழுந்த பொருளாதரத்தை எப்புடி மேல கொண்டுபோலாம்னு பாக்குறது தான் நல்லது .

மங்குணி : இதோ ரெண்டு கட்சிக்காரன்கிட்டயும் சொல்லிட்டு வரேன் .

மணியன் : டேய் போகாதடா ...அவனுகளுக்கு புரியாது ....

நன்றி
பாமரன் கருத்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக