1900 அதிகாரிகள் 11 வழிகாட்டி குழுக்கள் 200 வண்டிகள்.. எதுக்கும் அசராம கோமாதா பூஜை செய்த தினகரன்
மணியன் : டேய் மங்குனி டேய் எங்கடா போன ?
மங்குனி : நாய்க்கு சோறு வைக்க வேணாமா அது கத்திகிட்டே இருக்கு
மணியன் : நாட்டுல எவ்வளவு பெரிய ரெய்டு நடக்குது நீ நாய்க்கு சோறு வைக்கிறத பத்தி பேசிட்டு இருக்க
மங்குனி : அப்புடி என்ன நடந்துச்சு சசிகலா தினகரன் வீடுகள்ல ரெய்டு அத தான சொல்ல போறீங்க
மணியன் : என்னடா தமிழ்நாடே அலறுது நீ இவ்வளவு அசால்ட்டா பேசுற
டேய் 1900 பேரு ,11 குழு , 200 வண்டியாம்டா ..யாருக்கும் தெரியாம இருக்க கல்யாணத்துக்கு போகணும்னு சொல்லி வேன் புக் பண்ணி ரகசியமா பண்ணினாங்களாம்டா
மங்குனி : பண்ணி என்ன பண்ண போறாங்களாம்
மணியன் : எதாவது தப்பு நடந்து இருந்துச்சுன்னா கேஸ் போட்டு தண்டனை கொடுப்பாங்கடா
மங்குனி : கொஞ்சநாளைக்கு முன்னாடி விஜயபாஸ்கர் வீட்ல RK நகர் தேர்தலுக்கு 89 கோடி செலவு பண்ணினத்துக்கு ஒரு லிஸ்ட் கெடச்சுச்சுன்னு சொன்னாங்களே அது என்னாச்சு ?
பான் மசாலா ,குட்கா விக்கிறவங்ககிட்ட லஞ்சம் வாங்கினதா விஜயபாஸ்கர் , போலீஸ் உயரதிகாரிகள் பேரெல்லாம் கெடச்சுச்சே என்ன செஞ்சாங்களாம் ?
எல்லாம் சும்மா ஒரு மிரட்டலுக்கு தான் அய்யா
மணியன் : அதுவும் சரிதான். வருமான வரித்துறை கண்டுபிடிச்சுட்டோம்னு சொல்லி கேஸ் போடுறாங்க அப்பறம் கூட்டணி சேர்ந்துட்டா அந்த வழக்க அப்படியே மூடிருவாங்க
மங்குனி : மொத்தத்துல நாம கட்டுற வரி பணம் தான் வீணாப்போகுது
மணியன் : ஆமாடா தினகரன் எதுவுமே நடக்காத மாதிரி பசுவை வச்சு பூஜை போட்டத பாத்தா அப்டி தான் தெரியுது..ஒருவேளை வருவாங்கனு தெரிஞ்சுருக்குமோ
மங்குனி : சொல்லமுடியாது தெரிஞ்சுருக்கும்...ஹய்யோ ஹய்யோ
மணியன் : சரி சரி வயலுக்கு போயி நாத்தாங்காலுக்கு தண்ணி பாச்சிட்டு வா
மங்குனி : ஆமா நான் ஏதாவது சொல்லிட்டா உடனே வேலை சொல்லி அனுப்பிச்சுருவிங்களே
மணியன் : என்னடா ஏதோ சொல்ற.....
மங்குனி : போறேன் போறேன்....
மணியன் : அரசியல்வாதிகள் விளையாடுற விளையாட்டுல பாவம் வருமான வரித்துறை அதிகாரிகள் நிலைமை தான் பாவம் போலயே ...KTV ல என்ன படம் போடுறானு பாப்போம்
பாமரன் கருத்து