திங்கள், 2 ஜனவரி, 2017

ஹோட்டல்களில் இனி சர்வீஸ் சார்ஜ் கட்டாயம் அளிக்கத்தேவையில்லை ...கவனியுங்கள் உங்கள் பில்லை ...


இன்று மத்திய நுகர்வோர்த்துறை ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜ் கட்டாயம் அளிக்க வற்புறுத்த கூடாது என அறிவித்துள்ளது ...

பொதுவாக நமக்கு ஓட்டல்களில் அளிக்கப்படும் பில்களில் சர்வீஸ் சார்ஜ் , வாட் வரி , சர்வீஸ் டாக்ஸ் போன்றவை நாம் சாப்பிட்ட உணவு விலையோடு சேர்க்கப்பட்டிருக்கும் ...

இதில் சர்வீஸ் சார்ஜ் என்பது அங்கு வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் தொகை , வாட் மற்றும் சர்வீஸ் டாக்ஸ் இரண்டும் அரசால் விதிக்கப்படும் வரி ..

இதில் சர்வீஸ் சார்ஜ் மட்டும் இனிமேல் நாம் விரும்பினால் மட்டும் கொடுக்கலாம் என்று இப்போது தெளிவுபடுத்தபட்டுள்ளது . அந்த உணவகத்தின் சேவை பிடித்திருந்தால் நாம் அளிக்கலாம் பிடிக்கவில்லையென்றால் அளிக்காமல் கூட போகலாம் ...ஆனால் மற்ற இரண்டு வரிகளையும் கண்டிப்பாக கட்டியாக வேண்டும் ....

இந்த உத்தரவு எப்போதிலிருந்து பின்பற்றபடப்போகிறதோ இல்லையோ நாளை நீங்கள் உணவருந்த சென்றால் உங்கள் பில்லை பாருங்கள் ..ஒருவேளை சர்வீஸ் சார்ஜ் உங்கள் பில்லில் உங்கள் விருப்பமின்றி இணைக்கப்பட்டிருந்தால் கேள்வி கேளுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக