திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னையை காப்பாற்றியவர்கள்!!!

சென்னையை காப்பாற்றியவர்கள்!!!



அரசு இயந்திரங்களும் அரசு சார்ந்த ஊழியர்களும் எந்த இடத்திற்கு எந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்ற பொழுது நாங்கள் இருக்கின்றோம் என்று களத்தில் குதித்து முழுவீச்சில் பாதிப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வாட்ஸ்அப் பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் உதவியுடன் காப்பற்ற உதவியிருகிறார்கள்..

தல தளபதி தோணி கங்குலிக்காக சண்டை போட மட்டுமே லாயக்கு என்று எந்த சமூகம் திட்டியதோ அதே சமூகத்தை அதே சமூக வலைதளங்களின் உதவியோடு மீட்டு நாங்கள் இருக்கின்றோம் என்று காட்டியிறுக்கிறார்கள்.

இனி எத்தனை எத்தனை சோதனைகள் வந்தாலும் உங்களை காப்பற்ற உங்களுக்கு சேவை செய்திட நாங்கள் இருக்கின்றோம் என்று இந்த இளைய சமுதாயம் காட்டிவிட்டது. நேற்று எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்களுடன் பொது மக்களுக்கு உதவிட செல்லும் போது ஒட்டு மொத்த இளைய சமுதாயமும் மக்களுக்கு  உதவி செய்து கொண்டு தான் இருந்தனர். மொத்த சமூக வலைதளங்களும் மக்களை இணைத்து எளிதாக மக்கள் பயனடைய வழி செய்துள்ளது...யாரென்றே தெரியாத ஒருவருக்கு உதவிட மழையையும் தண்ணீரையும் பொருள்படுத்தாது என் நண்பர்களும் நானும் செல்லும் பொழுது என் மனம் நெகிழ்ந்தது.

அரசு இயந்திரம் அச்சிடவும் பிறர் தரும் உதவிகளை பெறாமல் இழுத்தடித்தும் பிறர் பேச்சுக்கு பதில் பேசியும் நேரத்தை போக்காமல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு நிவாரணம் சென்று சேர ஆவண செய்ய வேண்டும். மேலும் இந்த நிவாரணம் என்பது மழையோடு அழிந்து போன அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க உதவி செய்யுமாறு கேட்டுகொள்கின்றோம்..

பொதுமக்களும் உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு உதவியாக தங்களுக்கு உதவி கிடைத்தால் மீண்டும் அதே உதவியை பெறாமல் பாதிக்கப்பட்ட மத்த மக்கள் இருக்குமிடத்தை காட்டி நிவாரணம் அவர்களையும் சென்றடைய செய்தால் நன்றாக இருக்கும் என்பதே எங்கள் கருத்து..

மீண்டும் நல்வாழ்க்கை அமைய வாழ்த்துகின்றோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக