புதன், 9 டிசம்பர், 2015

நீயும் நானும்



நான் பூமியாக இருந்திருப்பேன்
நீ நிலவாக என்னை சுற்றியிருந்தால்

நான் கரையாக கரைந்திருப்பேன்
நீ கடல் அலையாக தினம் தீண்டியிருந்தால்

நான் கனவாக இருந்திருப்பேன்
நீ இரவில் தினம் என்னை காண விரும்பியிருந்தால்

நான் பூக்களாக இருந்திருப்பேன்
நீ தேனியாக பூவிதழ் பதித்திருந்தால்

நான் வார்த்தையாக இருந்திருப்பேன்
நீ என்னோடு கவிதையாக இருந்திருந்தால்

நான் உன் கை பிடித்துருப்பேன்
நீ என் காதலியாக இருந்திருந்தால்

***ஸ்ரீ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக