காதலும் கௌரவமும்
மண்ணோடு கலந்த அவன் அவளின் இரத்தத்துளிகள்
வெறும் இரத்தத்துளிகள் அல்ல
மனித குலத்தின் குரல்வளையை
ஜாதி என்னும் கூரிய கத்தி கொண்டு கிழித்ததனால்
வழிந்தோடிய பாவ துளிகள்
எவனோ நமக்களித்த சாபக்கேடு இந்த ஜாதி
இன்னும் அதை சுமந்து உயர கொண்டாடுவது
நம் தலைவிதி..
இரண்டு வயதில் மகள் காலில் வழிந்த
சிறுதுளி ரத்தம் கண்டு
ஒன்றும் செய்யாத கல்லின் மீது
பலி போட்டு - உடைத்தெறிந்த
அதே தகப்பன்
அவள் மனம் மகிழ்ந்து
புது வாழ்க்கை தொடங்கும் போது
ஆசை மகளின் உயிரையே எடுக்கும்
கொடூரன் ஆக்கியது
ஜாதி என்னும் விச மருந்து..
சொல்லோடும் ஏடோடும் ஜாதி ஒழிப்பு பேசும்
நாடகம் மறைந்து
செயலோடும் உறுதியோடும் ஜாதி ஒழிப்பு தொடங்கும்
நாள் தான் அதற்கு முற்று ...
கௌரவ கொலைகள் நடந்த நாள்
முதல் பக்க செய்தியாகவும்
இரண்டாம் நாள்
நடு பக்க செய்தியாகவும்
அடுத்தடுத்த நாட்களில்
மறைந்து போகும் கட்ட செய்திகள் போல
ஜாதி ஒழிப்பின் வீரியமும்
மேற்கில் மறையும் சூரிய ஒளிபோல மறைந்து கொண்டே போகும்..
இது தனி மனிதன் தவறல்ல
இது ஒட்டு மொத்த சமூகத்தின் தவறு...
இது ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி....
எந்த நிறமிருந்தாலும் யாவும்
ஒரே இனம் அன்றோ என்ற
பாரதியின் கூற்று
ஒரு புலம்பலாகவே மறைந்து போகுமோ!!!
மண்ணோடு கலந்த அவன் அவளின் இரத்தத்துளிகள்
வெறும் இரத்தத்துளிகள் அல்ல
மனித குலத்தின் குரல்வளையை
ஜாதி என்னும் கூரிய கத்தி கொண்டு கிழித்ததனால்
வழிந்தோடிய பாவ துளிகள்
எவனோ நமக்களித்த சாபக்கேடு இந்த ஜாதி
இன்னும் அதை சுமந்து உயர கொண்டாடுவது
நம் தலைவிதி..
இரண்டு வயதில் மகள் காலில் வழிந்த
சிறுதுளி ரத்தம் கண்டு
ஒன்றும் செய்யாத கல்லின் மீது
பலி போட்டு - உடைத்தெறிந்த
அதே தகப்பன்
அவள் மனம் மகிழ்ந்து
புது வாழ்க்கை தொடங்கும் போது
ஆசை மகளின் உயிரையே எடுக்கும்
கொடூரன் ஆக்கியது
ஜாதி என்னும் விச மருந்து..
சொல்லோடும் ஏடோடும் ஜாதி ஒழிப்பு பேசும்
நாடகம் மறைந்து
செயலோடும் உறுதியோடும் ஜாதி ஒழிப்பு தொடங்கும்
நாள் தான் அதற்கு முற்று ...
கௌரவ கொலைகள் நடந்த நாள்
முதல் பக்க செய்தியாகவும்
இரண்டாம் நாள்
நடு பக்க செய்தியாகவும்
அடுத்தடுத்த நாட்களில்
மறைந்து போகும் கட்ட செய்திகள் போல
ஜாதி ஒழிப்பின் வீரியமும்
மேற்கில் மறையும் சூரிய ஒளிபோல மறைந்து கொண்டே போகும்..
இது தனி மனிதன் தவறல்ல
இது ஒட்டு மொத்த சமூகத்தின் தவறு...
இது ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி....
எந்த நிறமிருந்தாலும் யாவும்
ஒரே இனம் அன்றோ என்ற
பாரதியின் கூற்று
ஒரு புலம்பலாகவே மறைந்து போகுமோ!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக