சனி, 23 ஏப்ரல், 2016

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை 

மற்றவர்களைவிட நாம் தாழ்ந்தவர்களோ என்கிற சந்தேகம் நம் அனைவருக்கும் உண்டு. அவள் என்னை விட அழகாக இருக்கிறாளோ அவன் என்னை விட நன்றாக விளையாடுகிறானோ வேலை செய்கிறானோ இது போன்று எண்ணுவது சகஜம். மாக்ஸ்வெல் மால்டஸ் என்னும் மருத்துவர் கூறுகின்றார் திறமை தோற்றம் வாழ்க்கைமுறை போன்ற விசயங்களில் அதிகபடியான தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது. 

இதற்கு முக்கிய காரணம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பதால் தான். முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. நான் நான் தான்..நீங்கள் நீங்கள் தான். மனிதனை படைத்தது இறைவனோ யாரோ ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையுடன் வெவ்வேறு தோற்றத்துடனும் திறமையுடனும் மட்டுமே இங்கு படைக்கப்பட்டிருகின்றோம். எப்பொழுதுமே நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்த்து நமக்கு என்ன வரும் நம்மால் எதை சரியாக செய்ய முடியும் நமது லட்சியம் என்ன நமக்கு இருக்கும் ஆற்றலால் அதை செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்து பார்த்து செயல்பட்டால் வெற்றி உங்கள் வசப்படும்...

உங்களுக்கு நன்றாக பாட வரும் என்று வைத்துக்கொள்வோம் ஆனால் உங்கள் நண்பர் நன்றாக ஆடுகின்றார் அதனால் அவர் புகழ் அடைகின்றார் என்பதற்க்காக நீங்களும் பாடுவதை விட்டுவிட்டு நடனம் ஆட சென்றால் வெற்றி பெற முடியாது..உங்கள் துறையில் நீங்கள் வல்லவராக ஆக முயலுங்கள்....நீங்களே வெற்றியாளர்.

நன்றி 
ஸ்ரீ 

[நன்றி: ஜிக் ஜில்லர்] 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக