புதன், 13 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு தினம் இன்று!!!

தமிழ் புத்தாண்டு தினம்  இன்று!!!



தமிழ் புத்தாண்டு என்றவுடன் நமது நினைவுக்கு வரும் முதல் வினா 'தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளா? தை முதல் நாளா?" என்று.

நெடுங்காலமாக நாம் சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றோம். கடந்த திமுக ஆட்சியில் தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தார்கள். ஆனால் அதற்கு அடுத்தபடியாக வந்த அதிமுக அரசோ மறுபடியும் சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. எந்த விசயங்களில் அரசியல் பார்க்க வேண்டும் என்பதே நமக்கு இன்னும் தெரியவில்லை.

இதை பற்றி தெரிந்து கொள்ள இணைய தளங்களில் உலாவிய பொழுது இரண்டையுமே ஆதரித்து நிறைய கருத்துகள் கிடைகின்றன...

சித்திரையை ஆதரித்து வந்த கருத்துகள் :
http://kural.blogspot.in/2012/04/blog-post.html
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/

தையை ஆதரித்து வந்த கருத்துகளுக்கு :
http://www.unmaionline.com/new/36-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-31-unmaionline/unmai2012/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-31/675-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D.html

பொதுவாகவே நம் வாழ்க்கையில் என்று மாற்றம் வருகின்றதோ அன்று தான் நமக்கு புதிய தினம். அந்த நாளே புத்தாண்டு தினம்.

இன்னும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் இருகின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டான மாடுபிடி திருவிழாவுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதற்காக நாம் இன்னும் எந்தவிதமான தரமான முயற்சியுமே எடுக்கவில்லை.

உலகிற்க்கு எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி கொடுத்த மூத்தகுடியான தமிழர்கள் இன்று சாதி மதம் போன்ற அற்ப காரணங்களுக்காக துண்டு துண்டாகி கிடக்கும் நிலைமை.

இன்னும் குடிசைகளிலும் பட்டினியாகவும் எத்தனையோ தமிழர்கள் இருந்து கொண்டும் இறந்து கொண்டும் தான்  இருக்கிறார்கள்.

உலகின் மூத்தகுடி என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னும் அதற்க்கான அங்கிகாரம் கிடைக்கவில்லை.

நமது முன்னோர்கள் கண்டுபிடித்து சொன்ன ஆயிரம் ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு எவன் எவனோ உரிமை கோரிக்கொண்டு இருக்கும் நிலைமை.

உலகை ஆண்ட தமிழன் இன்று தண்ணீருக்காக அடுத்தவரிடம் கை ஏந்தும் நிலைமை.

இன்னும் எத்தனை எத்தனையோ தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியவைகள் இருக்கின்றன. அவை யாவும் கிடைத்து தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழும் நாள் நமக்கு எப்போது வருமோ அந்த நாள் தான் நமக்கு புத்தாண்டு.

விரைவில் அந்த புத்தாண்டு தினம் வர வாழ்த்துக்கள்!!!!

ஸ்ரீ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக