1955 அமெரிக்காவில் எழுதப்படாத ஆனால் எழுதப்பட்ட சட்டத்தை போன்ற நடைமுறை ஒன்று இருந்தது. அதன்படி பேருந்தின் முதல் பாதியில் வெள்ளை இனத்தவர்கள் மட்டுமே அமர வேண்டும். பேருந்தின் பின்பாதியில் ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்கள் அமரவேண்டும் என்பதே. அதிலும் முன்பாதியில் வெள்ளை இனத்தவர்களுக்கு இடம் நிரம்பி விட்டால் பின்பாதியில் உள்ள கறுப்பினத்தவர்கள் எழுந்து அவர்களுக்கு இடம் விட வேண்டுமாம்.
ஒருமுறை கறுப்பின கர்ப்பிணி பெண் ஒருத்தி பின்பாதியில் இடம் இல்லாததால் முன்னால் இருந்த இடத்தில சென்று அமர்ந்து கொண்டாள் . அடுத்து ஏறிய வெள்ளை இன மக்கள் அவளை எழுந்து பின்புறம் சொல்லுமாறு கூறினர். ஆனால் அவள் பின்புறம் இடம் இல்லை என்னால் நிற்க முடியாது நான் கர்ப்பிணி பெண் என்று சொல்லி மறுத்தால். இப்படி நடந்து கொண்டதால் அவள் தண்டிக்கப்பட்டால்.அப்போது தொடங்கியதுதான் பேருந்து புறக்கணிப்பு போராட்டம்.
மார்ட்டின் லூதர் கிங்கின் அழைப்பின் பேரில் இந்த போராட்டம் 1955 இல் தொடங்கியது. இதன்படி இனிமேல் ஒரு கறுப்பின மக்கள் கூட பேருந்தில் பயணம் செய்ய கூடாது என்று அழைத்தார். அனைத்து கறுப்பின மக்களும் அன்று முதல் பேருந்தில் ஏறுவதை புறக்கணித்தனர். இதனை சாதாரணமாகவும் ஏளனமாகவும் வெள்ளை இனத்தவர்கள் மற்றும் பேருந்து நிர்வாகத்தினர் கருதினர். சுமார் 6 மாத கால இடைவெளிக்கு பிறகு பேருந்து நிர்வாகத்தினருக்கு புரிந்தது இந்த போராட்டத்தினால் மிகப்பெரிய இழப்பு என்று. வசதியில் உயர்ந்த வெள்ளை இனத்தவர்களை விட கறுப்பின மக்களே அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதும் புரிந்தது.
எனவே பேருந்து நிர்வாகத்தினர் ஒரு வேண்டுகோளை கறுப்பின மக்களுக்கு விடுத்தனர். அதன்படி போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பேருந்தில் பயணம் செய்யும் படி அழைத்தனர். ஆனாலும் பேருந்தில் எங்குவேண்டுமானாலும் அமரலாம் என்று ஒரு சட்டம் வரும் வரை போராட்டம் நிறுத்தப்படமாட்டாது என்று மார்ட்டின் சொன்னார். சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்த இந்த அறப்போராட்டத்தில் எவருமே பேருந்தில் பயணிக்க வில்லை.
ஒருமுறை மூதாட்டி ஒருவர் நடந்து சென்றதை பார்த்து பேருந்து ஓட்டுநர் கேட்டார் " நீ கூடவா இந்த வயதான காலத்தில் போராட வேண்டும் வா வந்து பேருந்தில் ஏறு" என்றார். அதற்க்கு அந்த மூதாட்டி கூறினார் " நான் எனக்காக நடக்கவில்லை மகனே. என்னுடைய அடுத்த தலைமுறைக்காக நடக்கிறேன்" என்றார் அந்த மூதாட்டி.
1956 இல் வந்த பேருந்தில் எங்கும் அமரலாம் என்ற சட்டம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. அந்த முதல் பேருந்து பயணத்தில் மார்ட்டின் லூதர் கிங்கும் ஒரு வெள்ளை இனத்தவரும் அருகருகே அமர்ந்து சென்ற அந்த பயணம் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மாற்றம் .
நன்றி
ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக