சனி, 15 அக்டோபர், 2016

முதல்வர் குறித்து பேசினாலே கைதா ? இது சரியா ?



முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. இது முற்றிலும் தவறானது.

அதே நேரத்தில் முதல்வர் உடல்நிலை  குறித்து பேசியதாலேயே கோவையில் இரண்டு வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது மிகவும் தவறு. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த நேரத்தில் எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகின்றனர்.

முதல்வர் உடல்நிலை குறித்து வெளிப்படையாக தெரியாத நிலையில் இன்றும் கிராமப்புறங்களில் ஏதேதோ பேசிக்கொண்டு தான்  இருக்கின்றனர் காரணம் அவர்களுக்கு முதல்வரின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. சில நேரங்களில் இந்த ஆவலே தவறான தகவல்கள் பரவிட காரணமாக அமைகின்றன.

காவல்துறையினர் அப்பாவிகளை கைது செய்யாமல் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடித்து  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக