சனி, 8 அக்டோபர், 2016

தலாக் தலாக் தலாக் சரியா ?

தலாக் தலாக் தலாக் சரியா ?

பொதுவாக இந்தியா மத சார்பற்ற நாடாக இருந்தாலும் திருமணம் வாரிசு உரிமை விவகாரத்து போன்றவற்றில் அந்ததந்த மதத்தினர் அவர்களுடைய மத முறைகளை பின்பற்றி கொள்ளலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது .இதற்கு காரணம் அனைத்து மதங்களையும் மதித்து மக்களை ஒருவழியில் கொண்டு செல்லவே .

கடந்த காலங்களில் தலாக் முறைப்படியான விவாகரத்துகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இப்போது செல் போன் மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் உட்சபச்சமாக அடுத்தவர் மூலமாகவும் சொல்லப்பட்டு விவாகரத்து செய்துவிடுகின்றனர் ..

இது முற்றிலும் தவறானது . மனித இனம் இத்தனை வளர்ச்சி கண்ட பின்பும் இன்னும் இதனை போன்றவற்றை முசுலீம் மக்களும் முசுலீம் மத தலைவர்களும் ஒன்று கூடி பெண்ணுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையையும் உணர்வையும் புரிந்து கொண்டு மாற்றங்களை கொண்டுவரவேண்டும் ....

இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து ஆளும் அரசு பொது சிவில் சட்டத்தை நுழைக்க முயல கூடாது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக