பாராளுமன்றத்தின் ' ஜீரோ ஹவர் ' தெரிஞ்சுக்கலாம் வாங்க ....
1960 களில் கேள்வி நேரம் முடிந்த பிறகும் மிக முக்கிய பிரச்சனைகளை உறுப்பினர்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர் .ஒரு கூட்டத்தின் போது ஒரு உறுப்பினர் தனது கேள்விகளை அவைக்கு வெளியே எழுப்பி கொண்டிருந்தார் ..அதுவும் உள்ளே அவை நடந்துகொண்டிருக்கும் போதே ..
அப்போது தோண்றியது தான் இந்த ஜீரோ ஹவர் ஐடியா ...அன்றைய மிக முக்கிய பிரச்சனைகளை அவையில் எழுப்புவதற்கு கேள்வி நேரம் போக கூடுதலாக இது அறிமுகப்படுத்த பட்டது ....
ரபி ராய் என்ற 9 வது மக்களவை தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்டது ..
பெயருக்கான காரணம்
கேள்வி நேரம் முடிந்த பிறகும் வழக்கமான நிகழ்வுகளுக்கு தொடக்கமாகவும் ஜீரோ ஹவர் இருக்கும் ...பொதுவாக இது நண்பகல் 12 மணிக்கு தொடங்குவதாலேயே இதற்கு ஜீரோ ஹவர் ...
விதிமுறைகள் என்ன
உறுப்பினர் தான் எழுப்ப நினைக்கும் கேள்வியினை தெளிவாக அன்றைய அவை தொடங்கும் போதே கொடுத்துவிட வேண்டும்
கேள்வியினை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமை அவை தலைவருடைய தனிபட்ட அதிகாரம்
ஒரு வாரத்தில் ஒரு உறுப்பினர் ஒரு கேள்வியினை மட்டுமே எழுப்ப முடியும்
மக்களவையில் நாள் ஒன்றுக்கு 20 கேள்விகளும் மாநிலங்களவையில் 7 கேள்விகளும் எழுப்பலாம்
பராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு ஜீரோ ஹவரில் எடுக்கப்படும் முடிவுகள் அல்லது அந்த பிரச்சனையின் தகவல்கள் அனைத்தும் அந்ததந்த அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் ..பிறகு அந்த உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்படும் ...
தினமும் ஜீரோ ஹவர் பகுதி நடைபெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
பயன்
கட்சிகள் பாராமல் அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி எழுப்ப உரிமை உண்டு ...
உடனடியாக பிரச்சனைகளுக்கான பதில்களை அந்த துறை அமைச்சர்களிடம் இருந்து பெற முடியும்
அன்றைய முக்கியதுவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்ப சிறந்த வாய்ப்பு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக