அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் கடந்துவிட்டன ....
தற்போது திமுக தலைவரான கருணாநிதி அவர்களும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ...
இந்த இரண்டு தலைவர்கள் தான் தமிழகத்தை பெரும்பாலும் ஆட்சி செய்து வந்தனர் ....
இந்த இரண்டு தலைவர்களுமே வயதில் முதுமை அடைந்து வருகின்றனர் ..அதனால் ஏற்படும் உடல்நிலை குறைபாட்டினால் தான் அடிக்கடி மருத்துவமனை செல்லும் நிலையும் வருகின்றது ...இது இயற்கையே ...
ஆனால் இந்த இரண்டு தலைவர்களும் அடுத்த தலைமுறை தலைவரை இன்னும் அறிவிக்காமல் உள்ளனர்.இது ஏன் என்று தெரியவில்லை ...திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் தான் அடுத்த தலைவராகும் தோற்றமாவது காட்டப்படுகின்றது ...ஆனால் அதிமுகவில் அடுத்த தலைவர் யார் என்று யாருக்கும் தெரியாது ...இதன் தாக்கம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டபோது வெளிப்படையாகவே தெரிந்தது .....
இதே நிலைமை தொடர்ந்தால் உங்களுக்கு பிறகு கட்சி உடைந்து காணாமல் போக கூட வாய்ப்பு உள்ளது.
இரண்டு தலைவர்களும் போதுமான அளவு ஆட்சி செய்துவிட்டீர்கள் ....இனிமேலாவது உங்கள் வயதினை உணர்ந்து உங்கள் கட்சிகளின் கொள்கையை காப்பாற்றக்கூடிய, மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அடுத்த தலைமுறை தலைவரை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டியாய் இருங்கள் ....
இப்போதும் நீங்கள் இதனை செய்யாவிட்டால் அது உங்கள் கட்சிக்கு தான் தீங்கு விளைவிக்கும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக