வெள்ளி, 2 டிசம்பர், 2016

மீண்டும் ஒரு அநீதி ...பம்பை நதியின் புனிதம் கெட்டுவிடாமல் இருக்க பெண்கள் குளிக்க தடை .....


ஏற்கனவே சபரிமலைக்குள் 10 முதல் 50 வயது பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ...இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் பெண்களை இனிமேல் அனுமதிப்பதாக சபரிமலை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது ....

இந்த பிரச்சனை முடிவதற்குள் திருவிதாங்குர் தேவஸ்தானம் பம்பை நதியின் புனிதம் கெட்டுவிடாமல் இருக்க பெண்கள் குளிக்க தடை விதித்துள்ளது ....

ஏதோ அவர்கள் வீட்டு நதியாக பம்பை நதியை கருதிவிட்டார்களோ ...இந்தியாவில் எங்கும் எதிலும் ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமை பெண்களுக்கும் உண்டு ....

எல்லாவற்றிற்கும் காரணம் தூய்மையாம் .....பெண்களின் மாதவிடாய் காரணத்தை கருதில் கொண்டே இந்த கேவலமான தடைகள் விதிக்கப்படுகின்றன .....பெண்களின் மாதவிடாய் என்பது ஒரு உடல்செயல்பாடு ....இதனை எப்போது தான் அந்த ஆண் சமூகம் உணர போகின்றது ..

பெண்களின் இந்த உடலியல் மாற்றத்தினை ஆயுதமாக  வைத்துக்கொண்டு ஆணாதிக்கம் பெண்களை ஒடுக்கி  விளையாடுகிறது .....

மாற்றம் வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக