செவ்வாய், 6 டிசம்பர், 2016

ஜெயலலிதா அவர்கள் மக்களுக்கு விட்டுச்சென்ற மற்றுமொரு முக்கிய செய்தி ....

இறந்த முதல்வர் தெய்வ பக்தி கொண்டவராகவே இருந்து வந்தார் ....கோயில்களில் அன்னதான முறையை கொண்டுவந்து ஆயிரம் ஆயிரம் ஏழைகளின் பசியை தினமும் தீர்த்து வந்தார்  ....

இவர் உடல்நிலை சரியில்லாத போது அப்பலோ மருத்துவமனையின் முன்பாகவும் தமிழக கோவில்களிலும் நடத்தப்பட்ட பூஜைகளையும் யாகங்களையும்  உலகில் இதுவரை யாருக்குமே செய்திடாத அளவுக்கு மக்களும் அரசியல் கட்சிகளும் நடத்தின ....

இது  எவராலும் மறுக்க முடியாத உண்மை ....ஆனாலும் அவர் மறைந்து விண்ணுலகம் சென்றார் ....எந்த பூஜைகளும் யாகங்களும் தடுத்து நிறுத்தவில்லை ..

ஒரு கடவுளாவது காப்பாற்றி இருக்கலாமே ? ...(இருந்திருந்தால் ஒருவேளை காப்பாற்றி இருக்கலாம் )

ஏன் காப்பாற்றவில்லை என்பதை மக்கள் தான் உணர வேண்டும் .....

தமிழக மக்கள் பெரும்பாலும் தங்களது சேமிப்பை கடவுள் செயல்பாடுகளுக்காக செலவழிக்கின்றனர் ..இப்போதாவது உணருங்கள் தெய்வங்களின் இருப்பை ...மன நிம்மதிக்காக கோவில்களுக்கு செல்லுங்கள் ....சேமிப்பை செலவு செய்யதீர்கள் ....

ஜெயலலிதா உங்களுக்கு விட்டுச்சென்றது துணிவு உழைப்பு முயற்சி மட்டுமல்ல கடவுள் தொடர்பான விழிப்புணர்வையும் மந்திர பூஜைகள் தொடர்பான விளக்கத்தையும் தான் ....

இனிமேலாவது ஜோதிடம் பூஜை என்று நேரத்தையும் சேமிப்பையும் விரயம் செய்யாமல் முயற்சி செய்யுங்கள் உழையுங்கள் முன்னேறுங்கள் ....

இப்போதாவது சில உண்மைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் ....

இதை படித்தவுடன் ஏதோ திராவிட கட்சிக்காரன் பேசுவதை போல எண்ணி விட்டுவிடாமல் கொஞ்சம் சிந்தியுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக