புதன், 7 டிசம்பர், 2016

மக்களை மாயைக்குள் அமுக்கும் பத்திரிக்கைகள் ...


யாராவது மிகபெரிய தலைவர்கள் இறக்கும் போதோ அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலோ ஏதாவதொரு பஞ்சாங்கத்தையோ அல்லது முன்னோர்களின் குறிப்பையோ எடுத்துவந்து பிரசுரிப்பதை பத்திரிக்கைகளும் சமூக வலைத்தளங்களும் செய்து வருகின்றன .....

இது மக்களை முட்டாள்களாக்கி இன்னும் மாயைக்குள் மயக்கி வைக்க நினைக்கும் செயல்தானே ...

சுனாமி வந்த போதும் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் இப்போது ஜெயலலிதா இறந்த போதும் (இவை சில எடுத்துக்காட்டுகள் ) பழைய பஞ்சாங்கத்தை கொண்டுவந்து இவர்கள் சொன்னது போலவே நடந்துவிட்டது என்று செய்தி வெளியிடுகின்றனர் ....

பத்திரிகைகளும் செய்தி தொலைக்காட்சிகளும் தான் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு சமூகத்தை மாற்றும் வல்லமையும் கடமையும் கொண்டவை ..ஆனால் இன்று அற்ப சுவாரஸ்யத்திற்காகவும் மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பவும் பஞ்சாங்க செய்திகளையும் பழைய குறிப்புகளையும் பிரசுரிக்கின்றனர் ....

பொதுவாக உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு அமானுஷ்ய விசயங்கள் மிகவும் பிடித்திருக்கின்றன ...இது காலத்தின் போக்கில் மனதில் திணிக்கப்பட்ட ஒருவித நம்பிக்கை ...இதை உடைத்தெறிந்து மாயைகளை கலைந்து மனிதர்களாக மாறி வாழ வைப்பதற்கு செய்தி நிறுவனங்களுக்கும் பொறுப்புண்டு ..

அறிவியலால் நிரூபிக்கப்படாத எதுவாயினும் அது நிரூபிக்கப்படும்வரை பொய்யே . இதை மக்கள் குறிப்பாக அடுத்த சமூகத்தினரான மாணவர்கள் உணர வேண்டும் . கடவுள் உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம் ..ஆனால் அதுவே மூட நம்பிக்கையாக ஆகிவிட கூடாது 

www.pamarankaruthu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக