திங்கள், 19 டிசம்பர், 2016

ராஜ்யசபா எம்பி சச்சின் அவர்களுக்கு திறந்த மடல் ....

அன்புள்ள சச்சின் அவர்களுக்கு ,
என் போன்ற இளம் வயதினருக்கு நீங்கள் தான் முன்மாதிரி . விளையாட்டாகட்டும் அதில் உங்கள் பொறுமையாகட்டும் நிதானமாகட்டும் கடின உழைப்பாகட்டும் அனைத்துமே எங்களுக்கு முன்மாதிரி தான் ...நீங்கள் உலகக்கோப்பையை ஏந்தும் போதும் ஒவ்வொருமுறை நூறு ரன்களை கடந்த போதும் இந்திய மக்கள் வயது பாராமல் வாழ்த்தி  மகிழ்வார்கள் ...நாங்கள் எங்கள் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட செல்லும் போது என் பாட்டி கூட 'விளையாண்டு என்ன சச்சினா ஆக போற ' என்று தான் திட்டுவார்கள் ...அவர்கள் கிரிகெட் பார்த்தது இல்லை ....ஆனாலும் கிரிக்கெட் என்றால் நீங்கள் தான்
இத்தனை சிறப்பும் பொறுப்பும் கொண்ட நீங்கள் ஒரு விஷயத்தில் மட்டும் சரியாக நடந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது ...ஆம் ராஜ்ய சபாவின் நியமன எம்பியாக உங்கள் செயல்பாடு திருப்தியாக எங்களுக்கு படவில்லை ...
நியமன எம்பியாக இருந்தாலும் நீங்களும் மக்களின் பிரதிநிதியே என்பதை மறந்துவிட கூடாது ..
நீங்கள் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பேற்று எத்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளீர்கள் ..
குறிப்பாக 500 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ராஜ்ய சபா கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது ...ஆனால் நீங்கள் ஒருநாள் கூட அவைக்கு வரவில்லை ...உங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை ...
நீங்கள் நியமன எம்பியாக ஆன பிறகு கிராமங்களை தத்தெடுத்தது உட்பட பல நல்ல காரியங்கள் செய்துள்ளீர்கள் ஆனால் உங்கள் எம்பி பதவியில் மட்டும் ஏன் உங்களால் சிறப்பாக செயல்படமுடியவில்லை ....
விளையாட்டு வீரரான உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கலாம் .ஆனால் அத்தனையையும் விட எம்பி பதவி மிக முக்கியமானது மற்றும் உயர்ந்தது ..உங்களால் நேரம் ஒதுக்க முடியாது என்று கருதினால் தயவு செய்து ராஜினாமா செய்துவிடுங்கள் ....அது சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் ..அல்லது தவறாமல் கலந்துகொண்டு கேள்விகளையும் கருத்துகளையும் பதிவிடுங்கள் ....
பல பேர் கூட்டங்களில் கலந்து கொள்ளாதிருக்கும் போது உங்களை மட்டும் கேட்க எங்களுக்கு காரணம் இருக்கின்றது ....நீங்கள் எங்கள் முன்மாதிரி ..அனைத்திலும் பொறுப்புள்ளவர் ....சமூக அக்கறை கொண்டவர் ....இளைய சமூகத்தின் ரோல்மாடல் ....
அன்புடன்
உங்கள் ரசிகன் (ஸ்ரீ )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக