புதன், 21 டிசம்பர், 2016

சூழ்ச்சியில் எரியும் தமிழகத்தின் மரியாதையை காக்க திமுக பொறுப்பினை உணர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

ஜெயலலிதா அவர்கள் மறைந்தது என்பது அதிமுகவிற்கு தந்த இழப்பினை விட தமிழக அரசுக்கும் மக்களுக்கும் பெரிய இழப்பு ...அது நிர்வாக ரீதியாகவும் சரி மதிப்பு ரீதியாகவும் சரி .
.

இன்று வருமான வரித்துறையினர் தமிழக அரசின் தலைமை செயலாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர் ...தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை ...ஜெயலலிதா அவர்கள் இருந்தவரையில் மழைக்கு கூட தலைமை செயலகம் ஒதுங்க நினைக்காத வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்றால் காரணம் என்ன ...

இப்போது தான் ஊழலை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளதா ? இல்லை அதற்கு முன்பாகவே தெரிந்திருந்தாலும் உள்ளே நுழைய பயம் ..அது ஜெயலலிதா என்கிற ஆளுமையினால் ....மேலும் இதுபோன்ற சோதனைகளால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள உறவு பாதிக்கப்படும் .

ஆனால் இன்று மத்திய அரசாங்கம் பல இடங்களில் வருமான வரித்துறையினரை ஏவி விடுவது ஊழலை ஒழித்துவிடவேண்டும் என்கிற அக்கறையினாலா ? இல்லை என்பது பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்களுக்கு கூட தெரியும் ....திமுக மற்றும் இதர தமிழக கட்சிகளுக்கு தெரியாமலா இருக்கும் ...

ஜெயலலிதா இருந்தவரையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்று முடியாமல் போனது ....எனவே அவர் மறைந்த பிறகு பாஜக தனக்கு வேண்டியவர்களை அதிகாரத்தில் அமர வைக்க நினைத்தது ..ஆனால் அதற்க்கு மாறாக வேறு சிலர் பதவிக்கு வர அமோக வரவேற்பு நிலவுவதால் தனது கைப்பாவைகளை அதிரடியாக இறக்கிவிட்டு ஆட்டம் காட்டுகின்றது ....

இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் வெட்கக்கேடானது ...ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு தொக்குனு சொல்ற மாதிரி இப்போ நடந்துகிட்டு இருக்கு ..

இப்போதான் திமுக மற்றும் பிற தமிழக கட்சிகள் இதை பயன்படுத்தி விமர்சனம் மட்டுமே செய்துகொண்டிருக்காமல் மத்திய அரசின் அத்துமீறல்களுக்கு மம்தா பானர்ஜி அவர்களை போன்று எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் ..மத்திய அரசு மாநில அரசுக்கு நிர்வாக ரீதியில்
நெருக்கடி கொடுப்பதாக இதனை கருத வேண்டும் ...

உண்மை நிலையை உணர்ந்து திமுக முக்கிய பங்காற்ற வேண்டும் ...மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாக நடக்க வழிவிட வேண்டும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக