வியாழன், 29 டிசம்பர், 2016

பாஜக வின் இணைய அரசியல் யுக்தியை தோலுரித்து காட்டியுள்ளது 'Iam a troll ' புத்தகம் ....உஷார் சமூக வலைதளவாசிகளே ...


நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கட்சி பொதுக்கூட்டங்களை நடத்துவதை விட இணையம் வழியாக சமூக வலைத்தளங்களிலேயே முக்கியதுவம் காட்டியது ..தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு  முன்னேற்றமடையும் என்பது போன்ற தோற்றத்தினை தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்த்தனர் ....அதன் தாக்கத்தின் பலனாக ஆட்சியையும் பிடித்தனர் ...
ஒவ்வொரு கட்சியும் தனது கொள்கைகளை பரப்ப இது போன்ற குழுக்களை வைத்திருப்பதில் தவறில்லை ..ஆனால் பாஜக வின் தொழில்நுட்ப பிரிவானது கொள்கைகளை பரப்புவதோடு மட்டுமல்லாமல் மோடிக்கு எதிராகவோ அல்லது கட்சி கொள்கைகளுக்கு எதிராகவோ பேசினால் அவர்களை திட்டுவதற்கும் அவதூரு பரப்புவதற்கும் சில தொண்டர்களையும் இயக்கி வந்துள்ளது ...
இதனை இப்போது வெளியிட்டவர் அவதூறு பரப்புகின்ற குழுவில் இருந்த பாஜக தொண்டர் பெயர் சாத்வி கோஸ்லா .
அமீர்கான் சகிப்புதன்மை குறைந்துவிட்டது என்று கருத்து தெரிவித்தபோது அவரை தாக்கி எழுத உத்தரவு வந்ததாக கூறினார் சாத்வி ...
இதுபோன்ற குழுக்களின் மூலமாக ஒருகுறிப்பிட்ட கட்சிகளின் எண்ணங்கள் மக்களிடம் திணிக்கப்பட்டுவிடுகின்றன ...இது பாஜகவில் மட்டும் நடப்பதில்லை அனைத்து கட்சிகளிலும் நடக்கின்றது
இதனை தடுக்க தேர்தல் ஆணையம் முன்வந்திட வேண்டும் .மக்களும் சமூக வலைதளங்களில் வந்திடும் தகவல்களை உண்மை தன்மை அறியாமல் நம்பிட கூடாது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக