ஆர்கே நகர் இடைதேர்தலில் தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்கவேண்டும் என சசிகலா (தினகரன் ) தரப்பினரும் பன்னிர்செல்வம் தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர் .இரண்டு அணியினரும் தங்களுக்கு தான் ஆதரவு அதிகமென்பதை காட்டுவதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர் .
இறுதிமுடிவை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறோம் என்று கூறி இருதரப்பினரையும் நேரில் அழைத்துள்ளது ..
இது வெறுமனே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பது மட்டுமல்ல . யார் உண்மையான அதிமுக என்பதற்கான முடிவாகவே இது அமையும் .
ஒருவேளை சசிகலா அணியினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டால் ஆட்சியில் எந்த மாறுதலும் இருக்காது ..சசிகலா தரப்பு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பன்னிர்செல்வம் தரப்பு சுயேட்சையாக போட்டியிடும் .
மாறாக பன்னிர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கபட்டால் ஆர்கே நகரில் அவர்கள் இலை சின்னத்தில் போட்டியிடலாம் . அதோடு மட்டுமில்லாமல் உண்மையான அதிமுக வாக பன்னிர்செல்வம் அணி மாறிவிடும் . கட்சியின் அதிகாரம் முழுமையாக பன்னிர்செல்வம் அணிக்கு கிடைத்த பிறகு ஆட்சியில் மாற்றம் நிகழாமல் போகுமா ? நிகழும்
இன்னும் சிறிது நேரத்தில் அனைத்தும் தெரிந்துவிடும் ..
ஒருவேளை தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கிவிட்டு கட்சி பொதுத்தேர்தல் நடத்தி பொதுச்செயலாளரை தேர்தெடுங்கள் என்று உத்தரவிட்டால் ஆர்கே நகரில் புது சின்னத்தில் இரண்டு அணியும் போட்டியிடும் ...
உண்மையான அதிமுக தாங்கள்தான் என்ற பேச்சு தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக