நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த பசுமை தீர்ப்பாயம் தடை ...
101 வது அறிவியல் மாநாட்டில் தமிழகத்தில் 1450 கோடி ரூபாயில் நியூட்ரினோ ஆராய்ச்சி திட்டம் செயற்படுத்தபடும் என அறிவித்தார் அப்போதய பிரதமர் மன்மோகன் சிங் .
அதனை தொடர்ந்து பல ஆய்வுகளுக்கு பிறகு தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் நிறுவும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றது .
இந்தநிலையில் பூவுலகின் நண்பர்கள் என்கிற சமூக நல அமைப்பினர் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டனர் .அந்த வழக்கில் முக்கியமாக , இந்த திட்டம் முறையாக அங்கீகாரம் பெறாத தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் தேனியில் கட்டுமான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் இந்த திட்டதினால் சுற்றுசூழலுக்கும் ஆபத்து என கூறினர் ...
இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு அதிரடி தடை விதித்தது .
அரசின் முறையற்ற செயலால் மக்களின் வரிப்பணம் ஏறக்குறைய 1450 கோடி ரூபாய் வீணாகியுள்ளது .
இதற்கெல்லாம் யார் பொறுப்பு ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக