துளி நீர் நெருக்கி
பிறந்த முத்து ஒன்று
கடற்கரை மணலில்
உலாவிடும் கைகளில்
கிட்டுவதில்லை எளிதில்
யுகங்கள் பல கடத்தி
உருவான வைரம் அதுவும்
மேம்போக்கு வேலையில்
ஈடுபடும் பார்வையில்
படுவதில்லை எளிதில்
ஆழ நீந்தி
நீள மூச்சடக்கி
உயிர்போக தேடினால்
முத்து கிடைத்திடும்
ஆழ தோண்டி
நீள சுரங்கமமைத்து
உயிர்போக தேடினால்
வைரம் கிடைத்திடும்
உயர்ந்த முத்துவை
உயர்ந்த வைரத்தை
எளிதில் கிடைக்கா
இயற்கையே கூடி
பூட்டிட்ட போது
முத்தினும் உயர்ந்த
வைரத்தினும் உயர்ந்த
உன் மேனி அதனை
எளிதில் பார்க்க
வைப்பது சரியா ?
ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக