ஒரு ஆண்டுக்கு முன்புவரை எத்தனை பெரிய ஆபர்கள் கொடுத்தாலும் ஒரு GB டேட்டாவின் விலை நூறுக்கு குறைய வாய்ப்பில்லை . அதற்கு காரணமாக தொலைத்தொடர்பு சாதனங்களை நிறுவவும் பராமரிக்கவும் செலவு அதிகம் என்று கூறப்பட்டு வந்தது .நமக்கும் அந்த அதிகபடியான விலை கொள்ளையடிப்பதாக தெரியவில்லை .
வந்தது ஜியோ
கடந்த ஆண்டு அதுவரை பெட்ரோலிய துறையில் முதலீடு செய்துவந்த அம்பானியின் பார்வை தொலைதொடர்பு பக்கம் திரும்ப ஆரம்பித்தது . வந்ததோடு மட்டுமில்லாமல் இதுவரை எவரும் செய்யத்துணியாத கால் , மெசேஜ் , டேட்டா அனைத்தும் முற்றிலும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக அளித்தார் .
முற்றிலும் இலவசம் என்கிற அம்பானியின் அதிரடி திட்டத்தை தொலை தொடர்பு ஆணையம் (TRAI ) பார்வைக்கு கொண்டு சென்று தடை வாங்கிட Airtel உள்ளிட்ட நிறுவனங்கள் முயன்ற போதும் தடை விதிக்கப்படவில்லை .
ஒரு ஆண்டுகளை ஜியோ சேவை கடந்துவிட்ட இந்த நிலையில் பிற நிறுவனங்கள் அதிரடியாக தனது விலையை குறைத்து வாடிக்கையாளர்களை தனதாக்கி கொள்ள முயன்று வருகின்றன .
விளைவு முன்பு மொத்த 28 நாட்களுக்கும் ஒரு GB டேட்டாவை எவ்வளவு விலைக்கு அளித்தனவோ அதை விட குறைவான விலைக்கு தினம் ஒரு GB வரை மொத்தமாக மாதம் 28 GB கொடுக்க முன்வந்துவிட்டன .
இப்போதும் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் வந்திருக்க வாய்ப்பில்லை . லாபத்தில் சிறு பகுதி குறைந்திருக்கலாம் .
அப்படியென்றால் இத்தனை நாட்களாக நம்மிடம் அதிக விலைக்கு விற்று இருக்கிறார்கள் என்பது தானே உண்மை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக