குற்றம் செய்தவர்கள் விரைவாக தீர்ப்பு வழங்கப்படாததை பயன்படுத்தி விசாரனை காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்திலும் அமர்ந்துவிடுகின்றனர் .
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஜெயலலிதா அவர்களின் வழக்கு . வழக்கு விசாரனை முடிவதற்குள் சிலமுறை முதல்வராகவே இருந்துவிட்டார் ஜெயலலிதா . ஆனால் பிறகு குற்றவாளியென தீர்ப்பு வந்தது . ஒருவேளை இவ்வழக்கு பல ஆண்டுகளுக்கு நடக்காமல் ஓரிரு ஆண்டுகளில் தீர்ப்பு கிடைத்திருந்தால் அவர் முதல்வராக இருந்திருக்க முடியுமா ?
இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே தான் .
தற்போது இருக்கக்கூடிய பிரதிநித்துவ சட்டதின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டணை பெற்றால் விடுதலையான நாளிலிருந்து 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது . அதை மாற்றி குற்றவழக்கில் தண்டணை பெற்றுவிட்டால் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கவேண்டும் என கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அரசிடம் பின்வரும் விவரங்களை கேட்டிருக்கிறது .
தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதிக்கு சமமாகும் . ஆகையால் கண்டதற்கும் மக்கள் வரிப்பணத்தை வாரியிறைக்கும் அரசு நீதி விரைவாக கிடைக்க நீதிமன்றங்களை எழுப்பிடுதல் வேண்டும் .
நன்றி
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக