புதன், 1 நவம்பர், 2017

ஜப்பானில் வெள்ளத்தை எப்படி தடுக்கிறார்கள் தெரியுமா ?


தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன .இன்னும் கன மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வானிலை அறிக்கை கூறுகிறது .

மழை பேயும்போது வெள்ளத்திலும் , கோடைகாலங்களில் தண்ணீர் இல்லாமலும் தவிப்பதே வேலையாகி போகிறது .

சில வாரங்களுக்கு  முன்பு ஜப்பானிடம் இந்திய அரசு லட்சம் கோடி ரூபாய்க்கான புல்லட் ரயில் ஒப்பந்தத்தை செய்துகொண்டது .
அதே ஜப்பானில் வெள்ள பாதிப்பு நடக்காமல் இருக்க பயன்படுத்துகிற  தொழில்நுட்பம் மிகச்சிறப்பானது .



டோக்கியோ நாட்டின் முக்கிய நகரம் . நகரத்தின்  பல இடங்களில் இணைப்பு குழாய்கள் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ளன. அவை மிகபெரிய ஆழ்குழாய்  கிணறு போன்ற தோற்றமுடைய ஒரு தோண்டப்பட்ட கிணற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிணறும் 30 மீட்டர் அகலமும் 70 மீட்டர் ஆழமும் உடையவை

ஒவ்வொரு கிணற்றுடனும் குறைந்தது ஐந்து இணைப்புகள் இணைக்கப்பட்டு இருக்கும் . அவை நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் திறந்திருக்கும் .

கிணற்றுக்குள் சேகரிக்கப்படும் தண்ணீரானது அதிக திறன்வாய்ந்த ராக்கெட் இன்ஜின்களை கொண்டு விவசாய பகுதிகளுக்கோ அல்லது வறட்சியான பகுதிகளுக்கோ அனுப்பப்படுகின்றன .

இது நம்மாலும் முடியும் ஆனால் செய்வதில்லை .

நீரின்றி அமையாது உலகு . இதனை உணருமா தமிழக அரசு ?

புல்லெட் ரயில்களை கொண்டுவருவதற்கு முன்பாக இந்த மாதிரியான திட்டங்களையே நாம் கொண்டுவர வேண்டும் .

நன்றி
பாமரன் கருத்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக