இன்று மொபைல் வாங்கியவுடன் ஒவ்வொருவருமே முதலில் இணைவது சமூக வலைதளங்களில் மட்டுமே . இன்னும் சிலரோ மொபைல் வாங்குவதற்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் கணக்கினை தொடங்கியிருப்பார்கள் .
இன்றைய காலத்தில் செய்தி நிறுவனங்களுக்கு முன்பாகவே செய்திகளை மக்களிடத்தில் பகிர்ந்துகொள்ள உதவுகின்றது இந்த சமூக வலைதளங்கள் .
ஆனால் அந்த செய்திகளுக்கு மக்களின் எதிர்வினையும் அந்த சமூக வலைதளத்தோடயே முடிந்து விடுவதுதான் கொடுமை . ஆம் உதாரணத்திற்கு சர்க்கரை விலையேற்றம் நடந்தது . செய்திகள் சமூகவலைதளங்களில் தீயாக பரவின .
பெரும்பாலானவர்கள் தங்களின் எதிர்ப்பையும் வலுவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்கின்றனர் . ஆனால் எங்கும் பொதுமக்களோ குடும்பத்து பெண்மணிகளோ எதிர்த்ததாக செய்திகளே இல்லை .
யாரெல்லாம் செய்திகள் பரப்புகிறார்கள் :
உங்களுக்கு தெரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது , தற்போது இருக்ககூடிய அரசியல் கட்சிகளில் பலவும் தங்களுக்கென தகவல் தொழிலுட்ப பிரிவினை வைத்திருப்பார்கள் . இவர்களின் முக்கிய வேலையே எதிர்கட்சிகளுக்கு எதிராக செய்திகளையோ விமர்சனங்களையோ மீம்ஸ்களையோ பரப்புவதே .
அப்படி வெளியிடப்படும் எதிர்ப்பலைகளை நாமும் பகிர்ந்துகொள்கிறோம் .
மழுங்கடிக்கிறது :
முன்பெல்லாம் ஒரு செய்தி வரும் . அதுகுறித்த சாதக பாதகங்களை மக்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக பேசிக்கொள்வார்கள் . இதனால் அதன் தாக்கம் மக்களை நேரடியாக சென்றடைந்தன .
ஆனால் இப்போதோ அந்த செய்தியை பகிர்வது (Share) செய்துவிட்டால் நமது கடமை முடிந்துவிட்டதாக நாம் கருதிக்கொள்கிறோம் அல்லது அப்படி நம்மை மாற்றிவிட்டார்கள் .
அதிக கோபம் உள்ளவர்களுக்கு பிரச்சனையை யாரிடமாவது பகிர்ந்துகொண்டால் அது குறைந்துவிடும் என்பார்களே அதே நுட்பம்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது .
எதிர்ப்புகளை லைக் ஷேர் மீம்ஸ் போடுவதோடு நாம் முடித்துக்கொள்கிறோம் . அதனை செய்துவிட்டபிறகு நமது கோவம் எதிர்ப்பு அடங்கிவிடுகின்றது . அடுத்ததாக ஒரு காமெடி வந்தால் சிரித்துவிட்டு போகின்றோம் .
இது மழுங்கடிக்கிற செயல் தானே .
நன்றி
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக