வெள்ளி, 27 அக்டோபர், 2017

தகவல் அறியும் உரிமை சட்டம் : பயன்படுத்தலாமே நாமும்

சட்டத்தின் நோக்கம் : 



தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004, ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005,மக்களவையிலும், மே 12, 2005,ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள். (விக்கி)

நோக்கம்  : 

அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்

எப்படி கேள்வி கேட்பது : 

கேள்விகளை நீங்கள் சாதாரண வெள்ளை தாளில் தெளிவாக எழுதி கூட சமர்ப்பிக்க முடியும்.

எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் கேட்க முடியும்.

எந்த துறை சார்ந்த கேள்விகளையும் கேட்க முடியும். ஆனால் அரசு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள சில தகவல்களை மட்டும் பெற முடியாது. [விதிவிலக்கு அளிக்கப்பட்ட தகவல்கள்]

மத்திய அரசு துறைகள் : 

மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து உங்களுக்கு தகவல்கள் கிடைக்க வேண்டும் என்றால் https://rtionline.gov.in/ இந்த இணைய முகவரிக்கு சென்று உங்களுக்கான நிரந்தர கணக்கை உங்கள் விவரங்களை பதிவு செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

பிறகு அதற்குள் சென்று உங்களுக்கான கேள்வி எந்த துறையை சேர்ந்தது என தேர்ந்தெடுத்து
பிறகு உங்கள் கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

https://rtionline.gov.in/um_citizen.pdf

இதற்காக நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ 10. இந்த தொகையை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

உங்கள் விண்ணப்பத்தின் நிலையை உங்கள் பதிவு செய்யப்பட்ட ஈமெயில் முகவரிக்கும் மொபைல் எண்ணிற்கும் அனுப்பி வைப்பார்கள்.

நீங்கள் இணைய பயன்பாட்டாளராக இல்லாத பட்சத்தில் தபால் மூலமாகவும் கேள்விகளை கேட்கலாம்.

மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

மாநில அரசு துறைகள் : 

மாநில அரசு தற்போது இணையவழி பயன்பாட்டை கொடுக்கவில்லை ஆதலால் நாம் நிச்சயமாக தபால் மூலமாகவே கேள்விகளை கேட்கமுடியும்.

கால அவகாசம் மற்றும் முகவரி : 

பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்து மூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்திசெய்து, இதுவரை கிடைக்கப்பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.

இரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், மாநில தலைமை தகவல் ஆணையர், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 2, தியாகராயர் சாலை, ஆலையம்மன் கோயில் அருகில், தேனாம்பேட்டை, சென்னை-600018 (அ) தபால் பெட்டி எண்: 6405, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு உரியவர். அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, பேக்ஸ்: 044-24357580, Email: sicnic.in Web: www.tnsic.gov.in.

மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, “CENTRAL INFORMATION COMMISSION, II floor, August Kranti Bhavan, Bhikaji Kama Place, NEW DELHI – 110 066 என்ற இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் என்றால், www.rtionline.gov.in/ என்ற தளத்தில் மத்திய அரசின்கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம்.
www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

Reference :
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 [Wikipedia]
ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி? Vikatan


நன்றி
பாமரன் கருத்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக