OPS அணி :
சசிகலா முதல்வராக பதவியேற்க OPS அவர்கள் ராஜினாமா செய்தார் . பிறகு தியானம் செய்து எதிர்ப்பு தெரிவித்தார் . சசிகலா சிறை சென்ற பிறகு EPS அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
அதன்பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது OPS அணியை சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் EPS க்கு எதிராக வாக்களித்தார் . ஆனால் அப்போது அதிமுக கொறடா EPS க்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் . ஆகவே OPS அணி கொறடா உத்தரவை மீறிவிட்டது .
ஆகவே கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி கொறடா உத்தரவை மீறிய 12 உறுப்பினர்களின் பதவியை நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் மற்றும் கடமை உண்டு . ஆனால் அவர் அதனை செய்யவில்லை .
தினகரன் அணி :
பிறகு ஏற்பட்ட பிரச்சனையில் EPS அணியும் தினகரன் அணியும் உருவானது. உடனடியாக தினகரன் அணியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் EPS அவர்களை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தனர் . உடனடியாக அதிமுகவின் அப்போதய கொறடா சபாநாயகருக்கு கடிதம் எழுதி கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் இவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு கூறினார் . சபாநாயகர் அதனை ஏற்று அவர்களை பதவிநீக்கம் செய்தார் .பிறகு அதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது .
நமது கேள்விகள்:
ஒரு பணியில் இருப்பவர் ஒரு நிகழ்வு நடக்கும்போது அதன் மீது நடவடிக்கை எடுப்பது கட்டாயமா ? அல்லது எவராவது வந்து முறையிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டுமா ?
காரணம் இருகின்றது , கட்சித்தாவல் தடை சட்டம் குறித்து சபாயகருக்கு தெரியும் . OPS அணி எதிர்த்து வாக்களித்து விட்டதனால் அவர்களை அந்த சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பதும் அவருக்கு தெரியும் . ஆனால் அவர் அதனை செய்யவில்லை ? இது தவறா இல்லையா ?
OPS அணி மீது கட்சி தாவல் தடை சட்டத்தை பயன்படுத்தாமல் தினகரன் அணி மீது பயன்படுத்தி இருக்கிறார் என்றால் தனக்கு கொடுக்கபட்டுள்ள அதிகாரத்தை விரும்பியவர்களிடம் ஒரு மாதிரியும் விரும்பாதவர்களிடம் வெறொரு மாதிரியும் செயல்படுத்துவது சரியா ?
நீதிமன்றம் :
நீதிதுறைக்கு அனைவரும் சமம்தான் . ஆனால் பதவியிலிருப்பவர்களின் வழக்குகளே மிக முக்க்கியத்துவம் வாய்ந்தவை ஏனெனில் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு வரக்குடிய உத்தரவுகள் பயன் அற்றவை .
பார்க்கலாம் இன்னும் என்ன கொடுமையெல்லாம் நடக்கப்போகிறது என்று .
நன்றி
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக