கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இடையில் கல்வியை நிறுத்திவிடும் சிறார்களின் விகிதத்தை குறைத்திட 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்கிற நடைமுறையை அறிமுகப்படுத்தியது ...
இதன் காரணமாக இடைநிற்றல் விகிதம் குறைந்தாலும் கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது ...எப்படியானாலும் தேர்ச்சி என்கிற மன நிலையில் மாணவர்களும் என்ன நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் அடுத்த வகுப்பிற்கு போக தானே போகிறான் என்கிற மனநிலையில் ஆசிரியரும் இருப்பதே இதற்கு காரணம் ...
சரி அப்படியென்றால் பாஜக கொண்டுவந்திருக்கும் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே கட்டாய தேர்ச்சியை வரவேற்கலாமா என்றால் கண்டிப்பாக வரவேற்கலாம் ...ஆனால் அதே நேரத்தில் எப்படி இடை நிற்றலை குறைக்க போகின்றோம் என்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் ...ஒவ்வொரு வருடமும் இதனை ஆராய்ந்து சிறார்கள் இடைநிற்றல் விகிதம் குறைகிறதா என்பதை ஆராய வேண்டும் ....
மேலும் இதனால் கல்வியின் தரம் எப்படி உயருகிறது அல்லது உயர்த்துவது எப்படி என்றும் ஆராய வேண்டும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக