திங்கள், 30 நவம்பர், 2015

எதற்காக இத்தனை தாக்குதல்கள்???

எதற்காக இத்தனை தாக்குதல்கள்???
============================================

அண்மையில் பாரிஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 130 பேர் இறந்துள்ளனர். மேலும் 400 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளார்கள். அனைத்தையும் செய்தது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். இதை அவர்களே பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.

யார் இந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களுடைய கொள்கைகள் என்ன? எதற்காக இத்தனை வெறி? தீவிரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை ஒப்புக்கொள்ளவே முடியாது. நம்மால் உருவாக்க முடியாத எந்த பொருளையும் அழிக்க நமக்கு உரிமை இல்லை. இந்த கருத்து தீவிரவாததிற்கும் உச்ச நீதிமன்றம் அளிக்கும் மரண தண்டனைக்கும் கூட பொருந்தும்.

இந்த பாரிஸ் தாக்குதலுக்கு காரணம் பிரான்சு சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை எதிர்த்து நடத்தி கொண்டு இருக்கின்ற வான்வெளி தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் என்று சொல்லபடுகின்றது.

ஒரு பாமரனின் பார்வையில் வேண்டுமானால் இது பதிலடி தாக்குதலாக இருக்கலாம். ஆனால் உண்மையான நோக்கம் அவர்களால் எதையும் எந்த இடத்திலும் அவர்களால் செய்து காட்ட முடியும் என்று உலக நாடுகளுக்கு தெரிவிக்கவே இந்த தாக்குதல்.

நாம் தீவிரவாதம் பற்றி பேசும் போது நிச்சயமாக அதற்கான காரணங்கள் பற்றியும் எப்படி அவர்களால் இதையெல்லாம் எப்படி செய்ய முடிகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்கள் ஒன்றும் அரசோ அல்லது நாடுகளோ கிடையாது. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு இது போன்ற பெரிய தாக்குதல்களை நடத்த தேவையான ஆள் பலமும் பண பலமும் எப்படி கிடைகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னால் அதிபர் அளித்த பேட்டியில் ஒப்புக்கொள்கிறார். ஆமாம் நாங்கள் தான் அல்கொய்தா தீவிரவாத குழுக்களை இந்தியாவிற்கு எதிராக உருவாக்கினோம் என்று சொல்கிறார். ஆனால் இன்றோ அவர்களால் உருவாக்கப்பட்ட தீவிரவாத குழுவே ராணுவ பள்ளிகூடத்தை தாக்கியவுடன் அவர்களை அழிக்க நினைக்கின்றது அதே அரசு.

இதைப்போலவே தான் ஒவ்வொரு தீவிரவாத குழுக்களுக்கு பின்னாலும் எதாவது ஒரு நாடோ அல்லது புலனாய்வு அமைப்போ உதவி வருகின்றது. நேரடியாக எதையும் செய்ய முடியாத ஆட்சியாளர்கள் பழிவாங்க உருவாக்கியதே இந்த தீவிரவாத குழுக்கள்.


தீவிரவாத குழுக்கள் நம்மை போன்ற வளரும் நாடுகளில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் வறுமை மத சகிப்பின்மை போன்ற காரணங்களை பயன்படுத்தி இளைஞர்களை தன் கொடூர தாக்குதலுக்கு பயன்படுத்தி கொள்கின்றது.

இவ்வாறு தீவிரவாத குழுக்களுடன் இணைய  விரும்பும் இளைஞர்களை கண்டறிந்து கைது செய்யும் புலனாய்வு அமைப்புகள் அவர்கள் எதற்காக அந்த தீவிரவாத குழுக்களுடன் இணைய விரும்பினார்கள் என்று ஆராய்ந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்தாலே நமது இளைஞர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்.

குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 முதல் 30 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியை முடித்து வேலைக்கு காத்துருகிறார்கள். இவர்களில் சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைகின்றது. ஏனைய இளைஞர்கள் காத்திருந்து காத்திருந்து சமுதாயத்திலும் குடும்பத்திலும் பல்வேறு அவமானங்களை சந்தித்த பிறகு தீவிரவாதிகளின் கொள்கைகளில் எளிதாக நாட்டம் கொண்டுவிடுகின்றனர்.

இளைஞர்களும் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக தீவிரவாதத்தை நாடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

மற்ற நாடுகளை குற்றம் சொல்லும் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் மீது வெறுப்பு கொள்ளாமல் அன்பு பாராட்டி வாழ வேண்டும்.

இந்த உலகம் படைக்க பட்டதே அன்போடு வாழ்வதற்காக தான்...

***ஸ்ரீ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக